மேற்கு வங்கத்தை நெருங்கும் ஆம்பன் புயல்: மம்தாவுடன் அமித்ஷா தொலைபேசியில் பேச்சு!
ஹைலைட்ஸ்
- மேற்கு வங்கத்தை நெருங்கும் ஆம்பன் புயல்
- மம்தாவுடன் அமித்ஷா தொலைபேசியில் பேச்சு!
- இரண்டு தசாப்தங்களில் வங்கக்கடலில் ஏற்படும் இரண்டாவது சூப்பர் புயல் ஆகும்.
New Delhi: ஆம்பன் சூப்பர் புயல் நாளை மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு தரப்பில் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
5 சூறாவளிக்கு சமமான ஆம்பன் புயல் தனது பலத்தை அதிகரித்து வருகிறது என்றும் நாளை மாலை தாமதமாக வங்க கடற்கரையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதானல், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுகிறார்கள்.
இதுதொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மத்திய உள்துறை அமித்ஷா மேற்கொண்ட தொலைபேசி உரையாடலில், மேற்குவங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, மத்திய அரசு தங்களுடன் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, மம்தாவுக்கு உறுதியளித்துள்ளார். மேற்குவங்கத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் மாநிலத்தில் அரசியல் செய்வதாக மத்திய அரசை மம்தா கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தேசிய நெருக்கடி கண்காணிப்புக் குழுவை சந்திக்கும் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் பாதுகாப்புப் படைகள், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புத் துறைகள் எவ்வாறு அவசரக்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர் என்பது குறித்து விவாதிக்கின்றனர்.
முன்னதாக, நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
ஆம்பன் புயலானது நேற்றைய தினம் வங்கக்கடலில் சூப்பர் புயலாக உருவானது. தொடர்ந்து, இந்த புயல் கரையை கடக்கும் போது, மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலான சேதத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆம்பன் புயலானது, இரண்டு தசாப்தங்களில் வங்கக்கடலில் ஏற்படும் இரண்டாவது சூப்பர் புயல் ஆகும்.
மேற்கு வங்க கடற்கரையில் ஆம்பன் புயல் நாளை பிற்பகல் கரையை கடக்கும் போது, மிகக் கடுமையான சூறாவளி புயலாக 195 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு மணி நேரத்திற்கு 220 முதல் 230 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயலானது, 1999 ஆம் ஆண்டு ஒடிசாவைத் தாக்கி சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்த சூப்பர் புயலுக்கு பின்னர் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மிக மோசமான புயல் என்று கணிக்கப்பட்டுள்ளது.