Read in English
This Article is From May 20, 2020

ஆம்பன் புயலால் வங்கதேசத்தில் முதல் உயிரிழப்பு!

மோசமான புயல்களில் ஒன்றான ஆம்பன் புயலால் வங்கதேசத்தில் முதல் மரணம் ஏற்பட்டுள்ளது.

Advertisement
உலகம் Edited by
Kutna, Bangladesh:

பல ஆண்டுகளாக வங்கக்கடலில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான புயல்களில் ஒன்றான ஆம்பன் புயலால் வங்கதேசத்தில் முதல் மரணம் ஏற்பட்டுள்ளது. அதி தீவிர சூறாவளி புயலான ஆம்பன் புயல், கரையை கடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஆம்பன் புயல் இந்திய கடற்கரையை நோக்கி முன்னேறி வருவதால், ஒடிசா மற்றும் வங்காளத்தில் பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. இன்று பிற்பகல், மேற்கு வங்கத்தின் திகா நகரத்திலிருந்து 95 கி.மீ தூரத்தில் வடமேற்கு வங்காள விரிகுடாவை மையமாகக் கொண்டு புயல் வீசியது.

மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவைக் கடக்கும்போது புயல் மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அங்கு சுமார் 2 கோடி பேர் 12,000க்கும் மேற்பட்ட தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Advertisement

வடகிழக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும் இரண்டாவது "சூப்பர் புயல்" இதுவாகும். 

Advertisement