This Article is From May 20, 2020

ஆம்பன் புயல் எப்படி நகர்ந்து வருகிறது? - 10 முக்கிய தகவல்கள்!!

ஆம்பன் புயலால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்வதற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்கின்றன. மணிக்கு 110 - 120 வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இது மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் கொல்கத்தாவை தாக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆம்பன் புயல் எப்படி நகர்ந்து வருகிறது? - 10 முக்கிய தகவல்கள்!!

பெருங்காற்றை வீசிய பின்னர் புயல் வடக்கு நோக்கி நகரும். அன்பின்னர் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது. 

New Delhi:

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆபத்தான புயல்களில் ஒன்றாக ஆமபன் புயல் கருதப்படுகிறது. இது மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவை தாக்கி குறிப்பிடத்தகுந்த சேதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆம்பன் புயலால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்வதற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்கின்றன. மணிக்கு 110 - 120 வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இது மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் கொல்கத்தாவை தாக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆம்பன் புயல் நகர்ந்து வரும் விதம் குறித்த 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்..

1. ஆம்பன் புயல் மோதிர வடிவமாக காணப்படுகிறது. அதன் மையப் புள்ளியைச் சுற்றிலும் அலைகள் மோதிர வடிவில் உள்ளன. எதிர் கடிகார சுழற்சி முறையில் புயல் சுழல்கிறது.

2. மேற்கு வங்கத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், மித்னாபூர், ஹூக்ளி, கொல்கத்தா ஆகிய நகரங்கள் வழியே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

3. புயலின் வடக்கு முனை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மேற்கிலிருந்து கிழக்காக புயல் காற்று வீசக்கூடும்.

4. புயல் மணிக்கு 155 - 185 கிலோ மீட்டர் வேகத்தில் 24 பர்கனாசில் வீசக்கூடும். கொல்கத்தாவில் இதன் வேகம் 110 - 120 கிலோ மீட்டராக இருக்கும்.

5. பெருங்காற்றை வீசிய பின்னர் புயல் வடக்கு நோக்கி நகரும். அன்பின்னர் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது. 

6. புயல் கடந்து சென்று விட்டது என்று மக்கள் உடனடியாக எண்ணக் கூடாது. எனென்றால் அடுத்த 30 - 45 நிமிடங்களில் புயலின் கண் பகுதி வடக்கு நோக்கி நகரும். இதனால் புயலின் தெற்கு பகுதி சுழன்று தாக்கத் தொடங்கும்.

7. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி புயல் வீசும்போது, வேகம் மிக அதிகமாக இருக்கலாம். சுமார்  30 - 45 நிமிடங்களுக்கு இவ்வாறாக புயல் வீசும்.

 8. கடலோர பகுதிகளை புயல் தாக்கும்போது 4 - 5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்ப வாய்ப்புள்ளது. இது 24 பர்கனாஸில் நடக்கும். மித்னாப்பூரில் அலைகளின் உயரம் 3 - 4 மீட்டராக இருக்கலாம். 

9. ஆறுகள், நீர்நிலைகளையும் புயல் பாதிக்க கூடும். கரையில் இருந்து சுமார்  10 - 15 கிலோ மீட்டர் தூரமுள்ள பகுதியில் பாதிப்பு ஏற்படும். 

10. செல்லும் வழியில் எத்தகைய பாதிப்பையும் உண்டாக்கும் ஆற்றல் ஆம்பன் புயலுக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். 

.