This Article is From May 21, 2020

பேரழிவை ஏற்படுத்திய ஆம்பன் புயல்: கட்டுப்பாட்டு அறையில் இருந்து மம்தா தகவல்!

ஆம்பன் புயல் பேரழிவை ஏற்படுத்தியதாகவும், புயலின் தாக்கம் கொரோனா வைரஸ் தொற்றுநோயை விட மோசமானது என்று அவர் கூறியுள்ளார்.

பேரழிவை ஏற்படுத்திய ஆம்பன் புயல்: கட்டுப்பாட்டு அறையில் இருந்து மம்தா தகவல்!

Cyclone Amphan: பேரழிவை ஏற்படுத்திய ஆம்பன் புயல்: கட்டுப்பாட்டு அறையில் இருந்து மம்தா தகவல்!

Kolkata:

ஆம்பன் புயலால் மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன, மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளன, கட்டிடங்கள் இடிந்துள்ளதை தொடர்ந்து, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேரழிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதுவரை புயல் பாதிப்பு காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். தொடர்ந்து, புயல் தீவிரத்தை கண்காணிக்க நேற்றிரவு முழுவதும் மம்தா கட்டுப்பாட்டு அறையிலே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

ஆம்பன் புயல் பேரழிவை ஏற்படுத்தியதாகவும், புயலின் தாக்கம் கொரோனா வைரஸ் தொற்றுநோயை விட மோசமானது என்று அவர் கூறியுள்ளார். புயலின் தாக்கத்தை குறிப்பிடும் வகையில், மம்தா ஆம்பன் புயல் கோரத்தாண்டவம் ஆடியதாக தெரிவித்துள்ளார்.

ije6lpno

Cyclone Amphan: ஆம்பன் புயல் தாக்கத்தால் சுந்தர்பான் பகுதி அருகே மின்சார கம்பிகள் மீது மரம் சரிந்து கிடக்கும் காட்சிகள்.

நான் தற்போது போர் கட்டுப்பாட்டு அறையிலே இருக்கிறேன். நபன்னாவில் உள்ள எனது அலுவலகமும் சேதமடைந்துள்ளது. போரில் ஒரு கடினமான சூழ்நிலையை சமாளித்து வருகிறேன் என்று மம்தா கூறியிருந்தார். 

கடலோர மாவட்டங்களான வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்கள் வழியே புயல் கரையை கடந்ததால் அந்த மாவட்டங்களில் கனமழை மற்றும் சூராவளி காற்று வீசியது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது, வீடுகளின் கூரைகள் காற்றில் தகர்ந்தது, மரங்களும், மின் கம்புங்களும் சரிந்து விழுந்தன.

மணிக்கு 125 கி.மீ வேகத்தில் காற்று வீசிய நிலையில், கனமழை பெய்ததாலும், ஒரு பேரழிவுக்கான தடயங்களை ஏற்படுத்தியது. பலத்த காற்று வீசியதில், கார்கள் தூக்கி வீசப்பட்டன. மரங்களும், மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. இதனால், நகரில் பல பகுதிகள் இருளில் மூழ்கின. சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டன.

ஒவ்வொரு பகுதியாக இந்த பேரழிவால் பாதிக்கப்பட்டது. இதனால் தகவல் தொடர்புகளும் பாதிக்கப்பட்டன. 5 லட்சம் பேர் வரை வெளியேற்றப்பட்ட போதிலும், புயலின் மூர்க்கத்தன்மையை மாநில அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து,
மழையும் பெய்து வந்ததால், அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளை உடனடியாக அணுகவும் முடியவில்லை என மம்தா தெரிவித்திருந்தார்.

ஆம்பன் புயல் கரையை கடக்கும்போது சுமார் ஆறு மணி நேரம் பலத்த மழையுடன், சூறாவளி காற்று வீசியதால் கொல்கத்தா விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும், அதன் கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. 

திகா மற்றும் சுந்தரபான் பகுதிகளில் கடற்கரை அருகே பேரலைகள் எழுந்த காட்சிகளை விவரிக்கின்றன. 

ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்கள் ரூ.1 லட்சம் கோடி வரை இருக்கலாம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மதிப்பிட்டுள்ளார்.

.