This Article is From May 22, 2020

ஒடிசாவுக்கு ரூ. 500 கோடி நிவாரணம்! புயல் பாதிப்பை பார்வையிட்ட பின்னர் பிரதமர் அறிவிப்பு

ஆம்பன் புயலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் இழப்பீடாக மோடி அறிவித்துள்ளார். 185 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல், அதைத்தொடர்ந்து பெய்த மழை காரணமாக மேற்கு வங்கத்தில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஒடிசாவுக்கு ரூ. 500 கோடி நிவாரணம்! புயல் பாதிப்பை பார்வையிட்ட பின்னர் பிரதமர் அறிவிப்பு

ஆம்பன் புயலால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

New Delhi:

ஆம்பன் புயலல் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு ரூ. 500 கோடியை நிவாரண நிதியாக பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் இந்த அறிவிப்பை மோடி வெளியிட்டார்.

ஒடிசாவில் ஜெகத்சிங்பூர், கேந்திரபரா, பட்ராக், பாலசோர், ஜாஜ்பூர், மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்கள் ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை பிரதமர் மோடி சிறப்பு விமானத்தின் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரம் பார்வையிட்டார். 

இதன்பின்னர், மாநில கவர்னர் கணேஷி லால் மற்றும் முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

உடனடி நிவாரணமாக ரூ. 500 கோடி ஒடிசாவுக்கு வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக புயல் பாதிப்பு கணக்கெடுக்கப்பட்ட பின்னர், மற்ற தேவையான உதவிகள் அனைத்தையும் ஒடிசாவுக்கு மத்திய அரசு செய்து கொண்டுக்கும். 

புயல் காலத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு பல உயிர்களை ஒடிசா அரசு பாதுகாத்துள்ளது. புயலை எதிர்கொள்ள முன்கூட்டியே திறம்பட அரசு செயல்பட்டிருக்கிறது. இருப்பினும், மின்சாரம், வீடுகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், விவசாயம் உள்ளிட்டவற்றை புயல் கடுமையாக பாதித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக மேற்கு வங்கத்தை பார்வையிட்ட பிரதமா மோடி, அம்மாநிலத்திற்கு ரூ. 1,000 கோடி இழப்பீட்டை அறிவித்தார்.

இந்த பயணத்தின்போது மோடி மாஸ்க் அணியாமல் துண்டை முகத்தில் சுற்றிக் கொண்டார். ஆனால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா முதல்வர்கள் மாஸ்க் அணிந்திருந்தார்கள். 

ஆம்பன் புயலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் இழப்பீடாக மோடி அறிவித்துள்ளார்.

185 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல், அதைத்தொடர்ந்து பெய்த மழை காரணமாக மேற்கு வங்கத்தில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். 

.