இந்த புயல் 3வது வகை சூறாவளிக்கு சமமான வலுவான புயலாக இந்திய கடற்கரையை தாக்கும்.
ஹைலைட்ஸ்
- புயல் காரணமாக 4 முதல் 5 மீட்டர் உயரத்துக்கு எழும்பும் கடல் அலைகள்
- கரையை கடக்கும் போது, மணிக்கு 185 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்
- ஒடிசாவில் 1.3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தல்
வங்கத்தில் இன்று மாலை கரையை கடக்கும் ஆம்பன் புயலால், கடற்கரைக்கு அருகே உள்ள ஒடிசா மற்றும் வங்கத்தின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. இந்த புயலானது வடகிழக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் இரண்டாவது 'சூப்பர் புயலாகும்'. அதேபோல், பல ஆண்டுகளாக இல்லாத அளவு வங்கக்கடலில் ஏற்படும் வலுவான புயலாகும். இந்த புயல் 3வது வகை சூறாவளிக்கு சமமான வலுவான புயலாக இந்திய கடற்கரையை தாக்கும். இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் பலத்த மழை மற்றும் காற்று வீசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, புயல் காரணமாக 4 முதல் 5 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்புகின்றன. இதனால், வங்கத்தின் தாழ்வான கடலோரப் பகுதிகள் மூழ்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இயக்குநர் மஹோபத்ரா தெரிவித்துள்ளார்.
ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. பாராதீப் பகுதிகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது என தேசிய பேரிடர் மீட்பு படை தலைவர் எஸ்.என்.பிரதான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் இருக்கும் நிலையில், புயலும் சேர்ந்துள்ளதால் நாட்டிற்கு இருமடங்கு சவாலாக உள்ளது என்றார்.
ஒடிசாவில் கிட்டத்தட்ட 1.3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். வங்காளத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் 2 கோடிக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆம்பன் புயல் இந்திய கடற்கரையை கடக்கும் போது, மணிக்கு 185 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடலில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களை இந்திய கடற்படை தீவிரமாக கவனித்து வருகிறது. இந்திய கடற்படையின் கப்பல்கள் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.