Cyclone Bulbul: நேற்று மேற்கு வங்காளத்தை கடந்த புல்புல் சூறாவளி புயல் கடந்தது
Balasore, Odisha: ஒடிசா மாநிலத்தை புல்புல் சூறாவளி புயல் தாக்கியது. பாலேஸ்வர் மாவட்டத்தில் உள்ள பைன்ச்சா கிராமத்தில் சுமார் 350 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர். பலேஸ்வர் மாவட்டம் சதர் தொகுதியிலும் தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு அதிகாரிகள் உணவு மற்றும் தங்குமிடம் வழங்கியுள்ளனர். மரங்கள் விழுந்துள்ளதால் சாலைகளை சுத்தம் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
நேற்று மேற்கு வங்காளத்தை கடந்த புல்புல் சூறாவளி புயல் கடந்தது. இப்போது பங்களாதேஷை கடந்து வருவதாக அலிபூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “ புல்புல் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தன் தீவிரத்தை இழக்கும். இப்போது காற்றுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று அலிப்பூர் வானிலை ஆய்வுத்துறை அதிகாரி ஜி.சி.தாஸ் கூறினார்.
அலிபூர் வானிலை ஆய்வு மையம் இப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு அடுத்த சில நாட்களுக்கு கடலில் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் பல பகுதிகளை சூறாவளி புயல் பாதித்தை அடுத்து சுமார் நேற்று சுமார் 200பேர் கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையின் சாகர் பைலர் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.