Cyclone Fani: ஃபனி புயலானது, ஒடிசாவில் இருந்து மேற்குவங்கத்தை நோக்கி இன்று காலை வந்தடைந்தது.
Kolkata: ஒடிசாவில்(Odisha) நேற்று கரையை கடந்து கோரத்தாண்டாவம் ஆடிய ஃபனி புயல்(Cyclone Fani), இன்று அதிகாலை மேற்கு வங்கத்தை அடைந்தது. ஒடிசாவில் புயல் தாக்கத்தால், 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இந்த புயலானது, மேற்குவங்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. 90கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது. நேற்று ஒடிசாவில், அதி தீவிரப்புயலாக கரையை கடந்த போது 185 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில், 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ஃபனி புயல் பாதிப்புகள் குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் கேட்டறிந்தேன். புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வர மத்திய அரசு தொடர்ந்து துணை நிற்கும் என்று அவரிடம் உறுதியளித்துள்ளேன்.
பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒட்டு மொத்த நாடே ஒற்றுமையாக துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஒடிசாவை அதி தீவிரப்புயலாக அச்சுறுத்திய ஃபனி புயல், மேற்குவங்கத்தை நோக்கி வலுவிழந்து நகர்ந்தது, தற்போது மீண்டும் மிக தீவிரப்புயலாக உருப்பெற்றுள்ளது.
கடலோர மாவட்டமான மிட்னாபூரை சேர்ந்த 15,000க்கும் அதிகமான மக்கள் நேற்று இரவு முகாம்களில் தங்கவைக்கப்ட்டனர். இதேபோல், மேற்கு மிட்னாபூரை சேர்ந்த 20,00க்கும் அதிகமான மக்களும் முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர்.
ஒடிசாவின் பாலசோரில் இருந்து இன்று அதிகாலை 12:30 மணி அளவில் மேற்கு வங்கத்தில் நுழைந்தது ஃபனி புயல். கராக்பூரில் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஃபனி புயல் கடந்தது. தற்போது ஃபனி புயல் ஹூக்லி மாவட்டத்திற்குப் பக்கத்தில் இருக்கிறது. கொல்கத்தாவில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் ஃபனி புயல் மையம் கொண்டுள்ளது.
ஃபனி புயல் (Fani) மேலும் வடக்கு, வடகிழக்குத் திசைகளில் நகரும். தொடர்ந்து சனிக்கிழமை மதியம் ஃபனி புயல், வங்கதேசத்தை அடையும். வங்கதேசத்தில் நுழையும் போது ஃபனி, புயலாக மாறும்' என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தல் ஃபனி புயல் காரணமாக கனமழை பெய்து வருவதாகவும், பல மரங்களை வேரோடு சாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.