This Article is From May 03, 2019

ஒடிசாவில் கரையை கடந்த ஃபனி புயல்: 3 பேர் உயிரிழப்பு!

Cyclone Fani: ஒடிசா கடலோர பகுதியை நெருங்கி கொண்டு ஃபனி புயல் நகர்ந்து வருகிறது. இந்த அதிதீவிர புயலானது, எதிர்பார்க்கப்பட்டதற்கு முன்தாகவே, ஒடிசாவில் இன்று பகல் கரை கடக்கிறது. முன்னெச்சரிக்கையாக 89 ரயில்களை ரத்து செய்து இந்திய ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

Cyclone Fani: ஃபனி புயல் ஒடிசாவில் இன்று மாலை கரையை கடக்கிறது.

Puri, Odisha:

வங்கக்கடலில் உருவான ஃபனி (Fani) புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று ஒடிசாவின்(cyclone fani Odisha) புரி பகுதியில் இன்று பகல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சரியாக 8.30 மணி அளிவில் புயல் கரையை கடக்க துவங்கியுள்ளது.

இதனால், கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மீட்பு பணிக்காக கடற்படை, விமான படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஃபனி புயலானது (fani cyclone), 1999ல் வந்த சூப்பர் புயலை காட்டிலும் அதி தீவிரமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சூப்பர் புயல் தாக்கத்தினால், ஒடிசாவில் 10,000 பேர் உயிரிழந்தனர். ஃபனி புயல் கரையை கடக்கும் போது, 175 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் தெற்கு புரியை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படை, ஒடிசா அதிரடிப்படை உள்ளிட்டவையும் புயலை எதிர்கொள்ள தயாராகியுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினர் 28 குழுக்களை ஒடிசாவுக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் 30 படைகள் தயார்நிலையில் இருக்கின்றன. முன்னெச்சரிக்கையாக 89 ரயில்களை ரத்து செய்து இந்திய ரயில்வே நடவடிக்கை எடுத்தள்ளது.

மே15-ம்தேதி வரைக்கும் ஒடிசாவில் அரசு மருத்துவர்களுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுப்பில் சென்ற காவலர்கள் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். தற்காலிகமாக 880 புயல் பாதிப்பு மையங்கள் கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் புயலை (fani cyclone) எதிர்கொள்வதற்காக 54 குழுக்களை பேரிடர் மீட்பு படையினர் அமைத்துள்ளனர். இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், '' அமைக்கப்பட்ட குழுக்களில் மருத்துவர்கள், மருந்தியலாளர்கள், பொறியாளர்கள், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

படகுகள், நீர் மூழ்கி, தொலைத் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவை தேசிய பேரிடர் மீட்பு படை அமைத்த குழுவில் இருக்கின்றன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலால் ஒடிசாவின் கடலோர பகுதிகளில் உள்ள 11 முதல் 16 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் என தெரிகிறது. எனவே, இப்பகுதிகளில் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

.