Fani Cyclone Status: ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
New Delhi: வங்கக்கடலில் உருவான ஃபனி (Fani) புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று ஒடிசாவின் புரி பகுதியில் இன்று பகல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சரியாக 8.30 மணி அளிவில் புயல்(cyclone fani Odisha) கரையை கடக்க துவங்கியுள்ளது.
இதனால், கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த புயலால், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் சேதம் ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் தகவலின்படி, ஃபனி புயலானது ஒடிசாவின் புரி பகுதிக்கு 65 கி.மீ முதல் 80 கி.மீ தொலைவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல்(Cyclone Fani) கரையை கடக்கும்போது மணிக்கு 200 கிமீ.க்கு பலத்த காற்று வீசும். மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒடிசாவில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் இரவு முதல் மழை பெய்து வருகிறது. ஒடிசாவில் தற்போது மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் காற்று வீசிக்கொண்டிருக்கிறது.
மேலும் புயலின் கண் பகுதி கரையை கடக்கும் போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 8.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய புயலின் தாக்கம் 11 மணி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிக்காக கடற்படை, விமான படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவின் கடலோர பகுதிகளில் உள்ள 11 முதல் 16 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் என தெரிகிறது. எனவே, இப்பகுதிகளில் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் 11 லட்சம் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒடிசாவுக்கு இன்று இயக்கப்பட இருந்த 223 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஃபனி புயலின் தாக்கம் எவரெஸ்ட் சிகரத்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கு 6,400 மீட்டர் உயரத்தில் இருக்கும் 20 முகாம்கள் ஃபனி புயல் தாக்கத்தால் காற்றில் பறந்துள்ளன.
250 அடி உயர ராட்சத கிரேன் விழுந்ததில் கட்டிடங்கள் தரைமட்டம் ஆனது. புவனேஸ்வரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்த விவரம் தெரியவரவில்லை
200 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய ஃபனி புயலால் வீடே அதிர்ந்ததாக புவனேஸ்வரம் மக்கள் தெரிவித்தனர். பாதுகாப்புக்காக அவர்களில் சிலர் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
தொலை தொடர்பு சேவையை உறுதி செய்வதற்கு ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் சிறப்பு அறைகளை அமைத்துள்ளன. இது 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் ஃபனி புயல் கரையை கடந்தது
புயல் பாதிப்புக்கு நடுவே புவனேஸ்வரத்தில் கர்ப்பிணி ஒருவர் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஃபனி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்: பிரதமர் மோடி
ஒட்டு மொத்த நாடும், மத்திய அரசும் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் மக்களுக்கு துணையாக நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், அதி தீவிரப்புயல் பாதிப்பு நிவாரண நடவடிக்கைகளுக்காக பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு நேற்றே ரூ.1000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்திற்கு ரெட் அலர்ட்!
ஃபனி புயல் மேற்குவங்கம் நோக்கி செல்லும் நிலையில், மேற்குவங்கத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மாநில அரசானது, ஹவுரா, ஹூக்லி, ஜார்க்ராம், கொல்கத்தா உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களில் பல ரயில்கள் ரத்து செய்யப்ட்டுள்ளது. பிற்பகல் 3 மணியில் இருந்து நாளை காலை 8 மணி வரை மூடப்பட்டுள்ளது.
நிலைமை தீவிரமாக கண்காணிக்க கொல்கத்தா போலீசார் கட்டுப்பாட்டை அறையை திறந்துள்ளனர்.
ஃபனி புயல் கரையை கடக்கும் போது ஏற்பட்ட பலத்த காற்றில் பறந்த மேற்கூறைகள்..
ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபனி புயலால், 3 பேர் உயிரிழப்பு!
ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபனி புயலால், வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புரியில் இளைஞர் ஒருவர் மீது மரம் விழுந்ததில், உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் ஒருவர் தண்ணீர் எடுக்க வெளியே சென்ற போது, கான்கிரிட் கட்டிடத்தில் இருந்த விழந்த கற்களால் உயிரிழந்தார். மற்றொரு பெண் முகாம்களில் தங்கியிருந்தபோது, நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
ஃபனி புயல்: புயல் நிவாரண நடவடிக்கைகளுக்காக ரூ.1000 கோடி விடுவித்துள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.
அதி தீவிரப்புயல் பாதிப்பு நிவாரண நடவடிக்கைகளுக்காக பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு நேற்றே ரூ.1000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்புப் படை முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது.
கோபால்பூரில் ஃபனி புயல் தாக்கம் குறித்து விளக்கும் புகைப்படம்.
ஃபனி புயல்: பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரங்கள் தள்ளிவைப்பு
ஃபனி புயல் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தனது தேர்தல் பிரசாரங்களை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரத்து செய்துள்ளார். ஜார்கண்ட்டில் மே.5 ஆம் தேதி நடைபெற இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசாரம், மே.6 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என பாஜக செய்திதொடர்பாளர் ராஜேஷ்குமார் சுக்லா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் முதல்வர் யோகியின் பிரசாரமும் இன்று திட்டமிடப்பட்டிருந்தது, அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடேய, பொறுப்பான குடிமகனாக, சட்டத்தை மதிக்கிறோம். பலகட்ட பேச்சுவாரத்தைக்கு பின்னர், நாங்கள் பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தை தேர்தல் முடிந்ததும் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என தயாரிப்பாளர் சந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
ஃபனி புயல் அப்டேட்: தற்போது வரை 11.5 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஒடிசாவில், தற்போது வரை 11 லட்சத்தி 54ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, ஃபனி புயலின் பாதிப்பால் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.
ஃபனி புயல் அப்டேட்,
கொல்கத்தா விமானநிலையம், இன்று பிற்பகல் 3 மணி முதல் மூடப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபனி புயல் பாதிப்பு: ஆந்திராவில் ரெட் அலர்ட்
ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாகுளம் பகுதியில் மிக கனமழை பெய்து வருகிறது. மேலும், பலத்த காற்று காரணமாக மரங்கள் வேரோடு சாய்துள்ளன, மின்கம்பங்களும் சாய்துள்ளன. 20,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 126 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதிக்கு ரெர் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள மக்கள். (PTI)
புயல் கரையை கடக்கும் நிலையில் புரி பகுதி,
ஃபனி புயலானது ஒடிசாவின் கடலோரம் இன்று காலை கரையை கடக்க துவங்கியது. இதன் காரணமாக அங்கு பலத்த மழை மற்றும் காற்று வீசி வருகிறது.
வானிலை மையம் தகவலின் படி, புயல் கரையை கடுக்கும் போது, 150 கி.மீ முதல் 175 கி.மீ வரை காற்று வீசக்கூடும். சில இடங்களில் அதனை விட அதிகமாக 200 கி.மீ வரை காற்று வீசக்கூடும்.
ஒடிசாவில் ஃபனி புயல் கரையை கடந்து வரும் நிலையில், அங்கு பலத்த காற்று வீசியதில் மரம் ஒன்று வேறுடன் சாய்ந்து விழுந்துள்ளது. (PTI)
ஒடிசாவில் ஃபனி புயல்
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் இருந்து 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதேபோல், புரியிலிருந்து, 1.3 லட்சத்திற்கும் மேலான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு உணவு வழங்க 5,000த்திற்கும் அதிகமான சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது.
அதி தீவிரப்புயலான ஃபனி புயல், இன்று காலை ஒடிசாவின் புரி பகுதி அருகை கரையை கடக்கத் துவங்கியுள்ளது. இதனால், அந்த பகுதியில் மணிக்கு 185 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு கரையை கடக்க நேரமெடுக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஃபனி புயலானது, இன்று காலை கரையை கடக்க துவங்கியுள்ளது. ஒடிசா கரையை கடக்க 3 நேரத்திற்கும் மேலாக நேரமெடுக்கும் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.