Cyclone Fani Update: ஃபனி புயலால் கொல்கத்தாவில், கனமழை பெய்து வருகிறது.
New Delhi: ஒடிசாவில்(Fani cyclone Odisha) நேற்று கரையை கடந்து கோரத்தாண்டாவம் ஆடிய ஃபனி புயல், இன்று அதிகாலை மேற்கு வங்கத்தை அடைந்தது. மேற்கு வங்கத்தல் ஃபனி புயல்(Fani cyclone) காரணமாக இரவு முதல் கனமழை பெய்து வருவதாகவும், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டமான மிட்னாபூரை சேர்ந்த 15,000க்கும் அதிகமான மக்கள் நேற்று இரவு முகாம்களில் தங்கவைக்கப்ட்டனர். இதேபோல், மேற்கு மிட்னாபூரை சேர்ந்த 20,00க்கும் அதிகமான மக்களும் முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர்.
இது குறித்து இந்திய வானிலை மையம் கூறுகையில், ‘அதி தீவிர புயலாக உருவெடுத்திருந்த ஃபனி, ஒடிசாவில் கரையை கடந்தபோது வலுவிழந்தது. எனினும், மேற்கு வங்கத்தை நோக்கி புயல் நகர்ந்த போது மீண்டும் தீவிர புயலாக மாறியது என்று தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தாவில் இருந்து ஏர் இந்தியாவின் முதல் விமானம் அகர்தலா நோக்கி புறப்பட்டுள்ளது.
4 லட்சம் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மேற்குவங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவில், புயல் பாதிகப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவில் நாளை மறுநாள் ஒடிசா செல்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மக்களுக்கு உதவ ஏர் இந்திய முன்வந்துள்ளதாவும், பாதிக்கப்பட்ட ஒடிசா மக்களுக்கு புயல் நிவாரண பொருட்களை எங்கிருந்து யார் அனுப்பினாலும் ஏர் இந்தியாவில், எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளது.
கொல்கத்தா விமான நிலையத்தில் 09.45 மணி அளவில் ஏர் இந்தியா தனது சேவையை துவங்கியது.
பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒட்டு மொத்த நாடே ஒற்றுமையாக துணை நிற்கும்
ஃபனி புயல் பாதிப்புகள் குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் கேட்டறிந்தேன். புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வர மத்திய அரசு தொடர்ந்து துணை நிற்கும் என்று அவரிடம் உறுதியளித்துள்ளேன்.
பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒட்டு மொத்த நாடே ஒற்றுமையாக துணை நிற்கும் என்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
ஒடிசாவில் நேற்று புயல் கரையை கடந்த நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளனர். 11லட்சம் பேர் ஒடிசாவில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 185 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.
தீவிரப் புயலான ஃபனி, கொல்கத்தாவின் வடமேற்கே 60 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது வலுவிலந்து இன்று பிற்பகல் மேற்குவங்கம் நோக்கி நகரும் என தெரிவித்துள்ளது.