Read in English
This Article is From Apr 30, 2019

வலுப்பெறும் ஃபனி புயல்: தயார் நிலையில் கடற்படைகள்! - முக்கிய தகவல்கள்

Cyclone Fani: அவசரக்கால நிலைமையை சமாளிப்பது குறித்து தேசிய நெருக்கடிக்கால மேலாண்மைக் குழுவானது நேற்று ஆலோசனை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து, கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய கடலோர காவல்படை உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.

Advertisement
தமிழ்நாடு Edited by (with inputs from Agencies)

Cyclone Fani: ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

New Delhi:

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபனி(Fani) புயல் அதி தீவிரப்புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், எச்சரிக்கை நடவடிக்கையாக(fani cyclone update) இந்திய கடற்படை சார்பாக மிட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

ஃபனி புயலானது(Fani Cyclone), வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா கடற்பகுதி நோக்கி செல்லும் நிலையில், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இந்த ஃபனி புயலானது, மிக அதி தீவிரப்புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்திய கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய கடலோர காவல்படை உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.

நேற்று மாலை நிலவரப்படி சென்னைக்கு 770 கி.மீ தொலைவிலும், ஆந்திரவிற்கு 900 கி.மீ மையம் கொண்டிருந்தது.

சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை கப்பல்கள் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அவசரக்கால நிலைமையை சமாளிப்பது குறித்து தேசிய நெருக்கடிக்கால மேலாண்மைக் குழுவானது நேற்று ஆலோசனை மேற்கொண்டது. ஃபனி புயல் குறித்த நிலைமையை பிரதமர் மோடி தீவிரமாக கவனித்து வருவதாகவும், தீவிர புயலாக மாறி வரும் ஃபனி தாக்கத்தை சமாளிப்பது குறித்து தேசிய நெருக்கடிக்கால மேலாண்மைக் குழுவானது இன்றும் ஆலோசனை மேற்கொள்கிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஃபனி புயல்(Cyclone Fani) காரணமாக, இந்த வாரம் நடைபெறுவதாக இருந்த இந்திய விமானப்படையின், பிரமோஸ் எவுகணை சோதனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஒடிசா அரசு 3 கடலோரப் பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு விடுமுறையை ரத்து செய்துள்ளது.

Advertisement

10 லட்சம் மக்கள் வரை தங்கும் வகையிலான 879 முகாம்கள் ஒடிசாவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ஃபனி புயல் குறித்த நிலைமையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிடச் சொல்லியும் அறிவுறுத்தியுள்ளேன். பாதிக்கப்படும் என்ற எண்ணப்படும் மாநிலங்களுடன் இணைந்து பணி செய்யுமாறும் அவர்களிடம் கூறியுள்ளேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலத்துக்காவும் வேண்டிக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

(With inputs from PTI, IANS and ANI)

Advertisement