Fani Cyclone: ஃபனி புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்றுள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது.
New Delhi: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபனி(Fani) புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக ஒடிசா, தமிழகம், ஆந்திர உள்ளிட்ட கடலோர பகுதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஃபனி புயலானது(Cyclone Fani) மே.3ஆம் தேதி ஒடிசாவில்(Cyclone in Odisha) கரையை கடக்கும் என கூறப்படுகிறது.
புயல் கரையை கடக்கும் போது 205 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஃபனி புயல்(Cyclone Fani) குறித்த தீவிரமாக கவனித்து வரும் பிரதமர் மோடி, மாநில அரசுகளுடன் தொடர்பில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிடச் சொல்லி தேசிய நெருக்கடிக்கால மேலாண்மைக் குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஒடிசா கரையோரம் செல்லும் ஃபனி புயலானது மேற்குவங்கும் நோக்கி செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வெளியில் வராமல் பாதுகாப்பாக வீட்டிலே இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக வானிலை மையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அதி தீவிரப்புயலாக மையம் கொல்லும் போது காற்றின் வேகம் 170 - 180 கி.மீ வேகத்தில் வீசலாம் என்றும் அதிகபட்சமாக 195 - 200 கி.மீ வேகத்திலும் காற்று வீசலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஃபனி புயலை எதிர்கொள்வது குறித்து தேசிய நெருக்கடிக்கால மேலாண்மைக் குழுவானது இரண்டவது நாளாக நேற்றும் மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
10 லட்சம் மக்கள் வரை தங்கும் வகையிலான 879 முகாம்கள் ஒடிசாவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
எச்சரிக்கை நடவடிக்கையாக கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மீட்பு நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆந்திரபிரதேசம், ஒடிசா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட பிரிவுகளின் விமானப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
41 இடங்கள் பாதிப்பு மிகுந்த பகுதியாக இருக்கும் என தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஆந்திரவில் (8), ஒடிசா (28), மேற்குவங்கம் (5). இதன் காரணமாக 13 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் மேற்குவங்கம் மற்றும் ஆந்திராவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
புயல் கரையை கடக்கும் போது, தாழ்வுநிலை பகுதிகளான கஞ்சம், குர்தா, புரி, ஜகத்சிங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகள் எற்படலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடலில் இருக்கும் மீனவர்கள் கரைக்கு வரும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. ஃபனி புயலால், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் சில பகுதிகளில் அனல் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மே.3 ஆம் தேதி புயல் கரையை கடக்கும் போது, மேற்குவங்கத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல், ஆந்திராவின் ஸ்ரீகாகுலம் மற்றும் விஜயநகரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பானி புயலை எதிர்கொள்வதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் முடிவின்படி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு ரூ.1,086 கோடியை நிவாரண நிதியாக முன்கூட்டியே வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்திற்கு ரூ.309.37 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.200.25 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.340.87 கோடியும், மேற்குவங்காளத்திற்கு ரூ.235.50 கோடியும் வழங்கப்படுகிறது.