மருத்துவத்திற்கான நுழைவுத்தேர்வு அகில இந்திய அளவில் மே5 நடைபெறவுள்ளது.
New Delhi: இந்தியாவின் தேசிய மாணவர் சங்கத்தின் கோவா தலைவர் பிரதமருக்கும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிஸா மாணவர்கள் ஃபனி புயலினால் பாதிக்கப்பட்டுள்ளதால் நீட் தேர்வினை எதிர்கொள்வதில் சிரமங்கள் எழுந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளது.
“மருத்துவ நுழைவுக்கான நீட் தேர்வுக்கு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் பயிற்சி செய்து தயாராகி வருகின்றனர். கிழக்கு கடலோரப் பகுதிகளில் ஃபனி புயல் கடும் அழிவுகளை உருவாக்கியுள்ளது. புயலின் பாதிப்பு உள்ள சூழலில் நாடு முழுவதும் ஒரு சேர தேர்வினை நடத்துவது முறையல்ல. மின்சாரம் மற்றும் அடிப்படை தேவைகளுக்கான எதுவும் கிடைக்கவில்லை அதனால் நீட் தேர்வினை ஒத்தி வைக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளனர்.
நீட் தேர்வு மே 5 அன்று நடைபெறவுள்ளது.