This Article is From May 03, 2019

ஃபனி புயல் : வாடிக்கையாளர்களுக்கு சேவையை உறுதி செய்ய ஏர்டெல், வோடஃபோன் சிறப்பு முயற்சி!!

புயல் காரணமாக புரி மற்றும் புவனேஸ்வர் ஆகிய 2 இடங்களில் தொலைத் தொடர்பு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

ஒடிசாவில் ஃபனி புயல் கரையைக் கடந்தது.

Highlights

  • ஃபனி புயலால் தொலை தொடர்பு சேவை பாதிப்பு
  • தொலை தொடர்பு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்படுகின்றன
  • 24 மணி நேரம் செயல்படும் சிறப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Fani Cyclone: ஃபனி புயல் காரணமாக தொலைத் தொடர்பு சேவை தடைபடால் இருப்பதற்கு சிறப்பு அறைகளை ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் அமைத்துள்ளன. இதன் மூலம் தொலைத் தொடர்பு சேவை எவ்வித இடையூறும் இன்றி தொடர்ந்து மக்களுக்கு கிடைக்கும் என்று 2 நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. 

புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எஸ்.எம்.எஸ். சேவையை ஏர்டெல்லும், வோடஃபோனும் இலவசமாக வாங்குகின்றன. 175 கிலோ மீட்டர் வேகத்தில் ஃபனி புயல் இன்று ஒடிசாவை தாக்கியது. 

இதனால் மின் மற்றும் தொலைத் தொடர்பு வயர்கள் அறுந்து விழுந்தன. இதையடுத்து புரி மற்றும் புவனேஸ்வரம் ஆகிய பகுதியில் தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டது. 

Advertisement

இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு சேவையை உறுதி செய்வதற்காக, ஏர்டெல்லும், வோடஃபோனும் சிறப்பு மையங்களை அமைத்துள்ளன. புயலால் இரு நிறுவனங்களின் சேவை பகுதியளவு புரி மற்றும் புவனேஸ்வரத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறது. 

இதுகுறித்து நமது கேட்ஜெட் இணையதளத்திற்கு ஏர்டெல் செய்தி தொடர்பாளர் அளிதத் பேட்டியில் ''நாங்கள் சிறப்பு அறைகள் அமைத்து, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவையை உறுதி செய்து வருகிறோம். இதற்கு அரசும், தேசிய பேரிடர் மீட்பு அதிகாரிகளும் உறுதுணையாக இருக்கின்றனர்.'' என்று தெரிவித்தார். 

Advertisement

வோடஃபோன் தரப்பில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்  பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ தரப்பில் ஃபனி புயல் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. 

Advertisement