Fani cyclone: மருத்துவமனையில் நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Bhubaneswar: ஒடிசாவை(Fani cyclone Odisha) மிரட்டி வரும் ஃபனி புயல்(Cyclone Fani) புவனேஸ்வரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையையும் சேதப்படுத்தி உள்ளது. இங்கு வீசிய பெரும் காற்றில், மருத்துவனையின் வாட்டர் டேங்க், கூரைகள் காற்றில் பறந்து சென்றன.
நிலைமை தீவிரம் அடைந்ததை உணர்ந்த எய்ம்ஸ்(AIIMS) நிர்வாகம் அனைத்து நோயாளிகள், பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றுள்ளது.
இன்று கரையை கடக்கும் நிலையில் காலை முதலை ஃபனி புயலின் தாக்கம் ஒடிசாவில் தீவிரம் அடைந்து வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையை ஃபனி புயல் தாக்கும் வீடியோவை பி.ஐ.பி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கூரைகள் மட்டுமல்லாமல், மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருந்த வாட்டர் டேங்குகள், மின் கம்பங்கள் உள்ளிட்டவை கடும் சேதம் அடைந்ததாக ஒடிசா சுகாதாரத்துறை செயலர் சிதான்சு கார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ -
11 லட்சம்பேர் இதுவரைக்கும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 240 மருத்துவமனைகளில் யு.பி.எஸ். மூலம் பவர் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 160 ரயில்கள் ஃபனி புயலால் ரத்து செய்ப்பட்டுள்ளன.
கடந்த 1999-ல் ஏற்பட்ட புயலில் சிக்கி 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அதனை விட இந்த ஃபனி புயல் தீவிரம் மிக்கது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.