Fani Cyclone: வங்கக் கடலில் இருக்கும் மீனவர்கள், இன்று மாலைக்குள் கரைக்குத் திரும்பி விடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Cyclone Fani: வட தமிழகம் மற்றும் தென் ஆந்திரப் பகுதிக்கு அருகே நகர்ந்து வரும் ஃபனி புயல், இன்று அதி தீவிர புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்னும் 24 மணி நேரத்தில் ஃபனி புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்து, செவ்வாய் கிழமை வாக்கில் கரையை அடைய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது வானிலை மையம்.
தற்போதைய நிலவரப்படி, ஃபனி புயல், சென்னையில் இருந்து 1,050 கிலோ மீட்டர் தொலைவிலும், மச்சிலிப்படிணத்தில் இருந்து 1,230 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
மேலும், வடமேற்கு திசை நோக்கி ஃபனி புயல் (Cyclone Fani) 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகும், ஏப்ரல் 30 முதல் அது வடகிழக்கு திசை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக் கடலில் இருக்கும் மீனவர்கள், இன்று மாலைக்குள் கரைக்குத் திரும்பி விடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஃபனி புயல் (Cyclone Fani), சென்னையை கடக்க சிறிய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த புயல் காரணமாக வட தமிழக கடற்கரைப் பகுதியிலும் ஆந்திர கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : வங்கக்கடலில் உருவானது ஃபானி புயல்: தப்புமா தமிழகம்?
(ANI & IANS தகவல்களுடன் பதியப்பட்டது)