பெய்ட்டி புயல் காரணமாக ஆந்திர பிரதேசம் கடலோர பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
Vijaywada, Andhra Pradesh: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி இடையே இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் பெய்ட்டி' புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதைத்தொடர்ந்து தற்போது கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அடுத்த 24 மணிநேரம் கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த புயலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது..
புயல் கரையை கடந்த போது 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதேபோல் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் மின்னிணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.
புயல் கரையை கடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஆந்திராவின் கடற்கரையை ஒட்டியுள்ள 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதேபோல் போல் மீனவர்களும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
50 ரயில்கள் ரத்து பெய்ட்டி புயல் காரணமாக ஆந்திர மாநிலம் காக்கிநாடா மார்க்கமாக செல்லும் 50 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காக்கிநாடா அருகே உள்ள ஏனாம் நகரத்தில் புயல், மழையால் வெள்ளம் சூழ்ந்தது. பெய்ட்டி புயல் கரையை கடந்தபோது பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது.