বাংলায় পড়ুন Read in English
This Article is From Apr 29, 2020

'ஆரோக்ய சேது' செயலியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் - அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு உத்தரவு

கொரோனா பரவலை கண்காணிப்பதற்காக ஆரோக்ய சேது (Aarogya Setu) செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆப் ஸ்டோர், ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை அனைவரும் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Highlights

  • கொரோனா பாதிப்பை கண்டறிய ஆரோக்ய சேது செயலி உருவாக்கப்பட்டுள்ளது
  • ஊழியர்கள் அலுவலகம் வரும்போது செயலியை பயன்படுத்த மத்திய அரசு உத்தரவு
  • மக்கள் அனைவரும் செயலியை பயன்படுத்துமாறு மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தல்
New Delhi:

அரசுப் பணியாளர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறும் முன்பாக 'ஆரோக்ய சேது' செயலியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும், அதில் வெளியே செல்லலாம் என்று தெரிவித்தால் மட்டுமே ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவு மத்திய அரசில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள், வெளியில் இருந்து அலுவலக பணிகளுக்கு வருவோர், தன்னாட்சி, பொதுத்துறை நிறுவனங்களில்  பயன்படுத்துவோர் இந்த விதிமுறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நேற்று மத்திய திட்டக்குழுவான நிதி ஆயோக்கின் அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்துவது குறித்து உத்தரவு வெளி வந்துள்ளது.

Advertisement

கொரோனா பரவலை கண்காணிப்பதற்காக ஆரோக்ய சேது (Aarogya Setu) செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆப் ஸ்டோர், ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை அனைவரும் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த செயலிலியில், நமது தொலைப்பேசி எண், முகவரி போன்ற விவரங்களை அளித்து, ப்ளூ டூத் மற்றும் ஜி.பி.எஸ்.யை ஆன் செய்து கொள்ள வேண்டும். 

Advertisement

ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். தகவல்கள் அடிப்படையில், கொரோனா பாதித்தோருடன் நாம் தொடர்பில் இருந்தோமா என்ற விவரத்தை ஆரோக்ய சேது செயலி நமக்கு வழங்கி விடும். இவற்றை கணக்கீடு செய்து நாம் நலமாக இருக்கிறோம், மிதமான ஆபத்து, அதிக ஆபத்தில் இருக்கிறோம் என்ற தகவலை நமக்கு அளிக்கும். 

இதன் மூலம் கொரோனா பரவுதலை அதிகளவு தடுக்க முடியும். இந்த செயலியை ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டும் என்றும், அவ்வப்போது இதில் வரும் தகவல்களை பார்க்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

Advertisement

ஆரோக்ய சேது செயலியில் ப்ளூடூத் மூலம் தகவல்கள் திருடப்படலாம் என்றும், இது ப்ரைவசி பிரச்னையை உண்டாக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து பதில் அளித்துள்ள செயலியை உருவாக்கியவர்கள் தகவல்கள் அரசுடன் மட்டும்தான் பகிரப்படும் என்றும், பெயரும், மொபைல் எண்ணும் எக்காரணத்தை கொண்டும் வெளியிடப்பட மாட்டாது என்றும் விளக்கம் அளித்துள்ளனர். 

Advertisement