புனேவைச் சேர்ந்த எம்.பி.ஏ மாணவி.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பரபரப்பான சாலையில் வாகன ஓட்டிகள் விதிகளை பின்பற்றுவதற்கும் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஜெயின் எனும் 23 வயதான எம்.பி.ஏ மாணவி நடன அசைவுகள் மூலம் கூறுகிறார்.
தன்னுடைய நடன அசைவுகளால் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியுமாறு வாகன ஓட்டிகளை கேட்டு வருகிறார். 15 நாள் இண்டென்ஷிப்பிற்காக நகரத்திற்கு வந்துள்ளார் புனேவைச் சேர்ந்த எம்.பி.ஏ மாணவி. இவரின் வீடியோக்கள் சமூக ஊடங்களில் வைரலாகியுள்ளன.
செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளது. “போக்குவரத்தை நிர்வகிக்க எனக்கு முன் அனுபவம் இல்லை. நான் இந்தூருக்கு வந்தபோது, நகரத்தில் போக்குவரத்தை நிர்வகித்து இந்த வேலையில் இளம் ஆர்வலர்களைக் கண்டு ஈர்க்கப்பட்டேன்” என்று கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தூர் தேசிய துப்புரவு கணக்கெடுப்பில் முதலிடத்தில் உள்ளது. மேலும் போக்குவரத்து முகாமைப்பதிலும் இந்த அழகான நகரம் நாட்டில் முதலிடத்தில் இருக்க முடியும் என்று தெரிவித்தார்.
மூத்த காவல்துறை அதிகாரிகள் அவரது தனித்துவமான நடவடிக்கையை பாராட்டியுள்ளனர். மேலும் அவரது கூடுதல் பணிக்காக காவல்துறை துணை ஆணையர் வருண் கபூர் பாராட்டியுள்ளார். மாலை 5 மணி முதல் 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் ஜெயின் தனது சேவை வழங்குகிறார்.
சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்ட ஒரு வீடியோவில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணியவும், நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் தங்களின் சீட் பெல்ட்டுகளை போடவும் அறிவுறுத்துவதைக் காணலாம்.
Click for more
trending news