This Article is From Dec 18, 2018

14 பேரை பலிகொண்ட கர்நாடக பிரசாத சம்பவத்தில் விஷம் இருந்தது கண்டுபிடிப்பு

பிரசாத மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் மனிதர்கள் உட்கொள்ளக் கூடாத விஷம் போன்ற பொருட்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது.

14 பேரை பலிகொண்ட கர்நாடக பிரசாத சம்பவத்தில் விஷம் இருந்தது கண்டுபிடிப்பு

சம்பவம் நடந்த அன்று 11 பேர் உயிரிழந்திருந்த நிலையில் எண்ணிக்கை தற்போது 14 ஆக உயர்ந்துள்ளது.

Belagavi/Bengaluru:

கர்நாடகாவில் 14 பேரை பலிகொண்ட பிரசாத சம்பவத்தில் மனிதர்கள் உட்கொள்ளக் கூடாத ஆபத்தான பொருட்கள் பிரசாதத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த கடந்த 14-ம் தேதியன்று மொத்தம் 11 பேர் இறந்திருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 14 ஆக உயர்ந்திருக்கின்றது.

கர்நாடகாவில் உள்ள சிலுவாடி கிராமத்தில் உள்ள மாரந்தா கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை உண்டவர்களுக்குத்தான் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தில் மண்ணெண்ணெய் வாடை வந்தததாகவும் எனினும் பக்தர்கள் அதை பொருட்படுத்தாது உண்டதாகவும் தெரிகிறது. பிரசாதம் சாப்பிட்ட சில மணி நேரத்தில் வயிற்று வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் உடனடியாக தென்பட ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக கர்நாடக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.இதன் தொடர்ச்சியாக பிரசாதத்தின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த சோதனையின் முடிவில், மனிதர்கள் உட்கொள்ளக் கூடாத ஆபத்தான பொருட்கள் பிரசாதத்தில் கலந்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை கர்நாடக துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

உள்நோக்கத்துடன் இந்த காரியத்தை செய்தவர்கள் விசாரணையில் சிக்குவார்கள் என்றும், 2 நாட்களுக்குள் அவர்களை கண்டு பிடித்து விடுவோம் என்றும் பரமேஸ்வரா கூறினார்.

.