This Article is From Sep 24, 2018

டஸால்ட் நிறுவன தலைவர் வீடியோவை ஷேர் செய்த காங்கிரஸ் - புதிய சர்ச்சைகள்

ரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரபேல் விமானத்தை இந்தியாவிற்கு அளிக்கும் டஸால்ட் நிறுவனத்தின் தலைவர் எரிக் டிரப்பியார், ரபேல் ஒப்பந்தம் குறித்து விவாதிக்கிறார்.

டஸால்ட் நிறுவனத்தலைவர் எரிக் டிரப்பியார், அனில் அம்பானி, பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி.

New Delhi:

ரபேல் ஒப்பந்தம் குறித்து சில முக்கியம்சங்கள்;

1. கடந்த 2015 மார்ச் 25ஆம் தேதி, நடைப்பெற்ற சந்திப்பில், டஸால்ட் தலைவர் எரிக் டிரப்பியார், இந்திய விமானப்படை அதிகாரிகளுடன் ரஃபேல் குறித்து விவாதிப்பது போன்ற வீடியோ காட்சிகளை காங்கிரஸ் கட்சியினர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

2. அதனை தொடர்ந்து, 17 நாட்களுக்கு பிறகு, பிரதமர் மோடி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார் என்று காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.

3. கடந்த 2015 ஏப்ரல் 10ஆம் தேதி, பிரதமர் மோடி அப்போதைய பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே உடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் 36 ரபேல் விமானங்களை வாங்கப்போவதாக அறிவித்தார். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசானது, டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 124 ரபேல் விமானங்களை வாங்கப்போவதாகவும், அதில் 18 விமானங்கள் முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் வாங்கப்படும் எனவும், 108 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்றது. அவ்வாறு இந்தியாவில் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்கள் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் என அறிவித்திருந்தது. எனினும் இது குறித்து எந்த ஒப்பந்தத்திலும் காங்கிரஸ் அரசு கையெழுத்திடவில்லை.

4. ரபேல் விமான தயாரிப்பில் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனம் ஈடுபட போவதாக கூறி வந்த நிலையில், பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்று வந்த பின் மாறியது எப்படி என எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

5. இதுகுறித்து முந்தைய வெளியுறவு செயலாளர் திரு.ஜெய் ஷங்கர் கூறியபோது, ரபேல் போர் விமானங்களை தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தையில் பிரான்ஸ் நிறுவனமும், ஹிந்துஸ்தான் நிறுவனமும் ஈடுபட்டு வந்தது. இது மிகவும் நுணுக்கமான தொழில்நுட்பம் சார்ந்த கலந்தாய்வு. இதற்கும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

6. பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்காயிஸ் ஹாலாண்டே அளித்த பேட்டியில், இந்தியாவிற்கான ரபேல் விமான தயாரிப்பில், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனத்தை நீக்கி ரிலையன்ஸ் நிறுவனம் உள்நுழைவதற்கு தற்போதைய அரசாங்கமே காரணம் எனக் கூறியுள்ளார்.

7. அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இது போன்ற விமான தயாரிப்பில் எந்த முன் அனுபவுமும் இல்லையென்றும், இந்த ஓப்பந்தம் குறித்து அறிவிக்கப்பட்ட 12 நாட்களுக்கு முன்பு தான் ரிலையன்ஸ் இந்த நிறுவனத்தை தொடங்கியதாக எதிர்கட்சியினர் கூறிவருகின்றனர்.

8. பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்காயிஸ் ஹாலாண்டே, ‘ரஃபேல் ஒப்பந்தத்தைப் (Rafale Deal) பொறுத்தவரை இந்திய அரசு, அனில் அம்பானியின் நிறுவனத்துடன் மட்டும் தான் கூட்டு சேர்ந்து பணிகள் செய்யச் சொன்னது. எங்களுக்கு வேறு எந்த நிறுவனம் குறித்தும் சிபாரிசு செய்யப்படவில்லை’ என்று சமீபத்தில் பகீர் கருத்து கூறினார். அவரின் இந்தக் கருத்து ரஃபேல் விவகாரம் தொடர்பாக நிலவி வரும் சர்ச்சையை மேலும் அதிகரித்தது.

9.ஹாலண்டேவின் கருத்தை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஒருவர், இந்திய பிரதமர் மோடியை திருடன் என்று கூறுகிறார். இது பிரதமர் பதவிக்கு ஏற்பட்டுள்ள கலங்கம்’ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும், இது பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

10. ரஃபேல் விவகாரம் தொடர்பான ராகுலின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.