ஹைலைட்ஸ்
- பெரியார் பல்கலை.,யில் 23 ஆராய்ச்சித் துறைகள் உள்ளன
- பெரியார் பல்கலை.,க்குக் கீழ் பல கல்லூரிகள் இருக்கின்றன
- அந்தக் கல்லூரிகளிலும் பல ஆராய்ச்சித் துறைகள் இருக்கின்றன
சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில் மற்றும் பிஎச்டி ஆய்வு படிப்புகளுக்கான விண்ணப்பிக்கும் தேதியை நீட்டித்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் மட்டும் 23 ஆராய்ச்சித் துறைகள் உள்ளன. இது மட்டுமல்லாமல், பல்கலைக்கழகத்துக்குக் கீழ் இயங்கும் கல்லூரிகளின் துறைகளில் 50-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சித் துறைகள் இயங்கி வருகின்றன.
இந்த ஆராய்ச்சித் துறைகளில் பல நூறு மாணவர்கள் தங்களது ஆய்வுப் படிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆராய்ச்சித் துறைகளில் புதிதாக சேர்ந்து ஆய்வு படிப்புகளில் ஈடுபடுவோருக்கான விண்ணப்பத் தேதியை நீட்டிப்பதாக பெரியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்தான அறவிப்பை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், குழந்தைவேல் வெளியிட்டார். மேலும் அவர், இந்த தேதி நீட்டிப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.