Election Dates in 5 States: சீக்கிரமே தேர்தல் வர உள்ளதால், அந்தந்த மாநிலங்களில் இருக்கும் கட்சிகள் காரசாரமான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்
New Delhi: மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையம் இது குறித்தான தகவலை இன்று வெளியிட உள்ளது. தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்தும் இன்று அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்தான அறிவிப்பை, இந்திய தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் வெளியிடுவார். சீக்கிரமே தேர்தல் வர உள்ளதால், அந்தந்த மாநிலங்களில் இருக்கும் கட்சிகள் காரசாரமான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானின் அஜ்மர் பகுதிக்கு சென்று, பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்ற உள்ளார்.
பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர், இன்று மத்திய பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். அங்கு 2013 முதல் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது.
இந்த வாரம் ஆரம்பத்தில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ‘ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை' என்று அறிவித்தார். இது காங்கிரஸ் தரப்பிலும், இரு மாநில தேர்தலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மாயாவதி, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.