ட்விட்டரில் வாழ்த்துப்பதிவை வெளியிட்டுள்ளார் காம்பீர்.
New Delhi: மகள்கள் தினத்தை முன்னிட்டு தனது மகள்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் காம்பீர் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
காம்பீர் தனது ட்விட்டர் பதிவில், 'உங்கள் பகல் எல்லாம் இரவாய்ப் போனாலும், நீங்கள் என்னை எப்போது சந்திக்க விரும்பினாலும் உங்களுக்கான நான் அங்கு இருப்பேன். எனது பெயரை மட்டும் சொல்லி அழையுங்கள். உங்களுக்காக நான் அங்கு இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
காம்பீருக்கு நடாஷா ஜான் என்ற மனைவியும், ஆசீன், அனைசா என்ற 2 மகள்களும் உள்ளனர்.
இந்தியாவை பொறுத்தளவில் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மகள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகள்கள் தினம் செப்டம்பர் 28-ம்தேதி கொண்டாடப்படுகிறது. இருப்பினும் வெவ்வேறு நாடுகளில் இந்த தினம் மாறுபட்டு காணப்படுகிறது.