বাংলায় পড়ুন Read in English
This Article is From Jun 21, 2020

மாஸ்கோ பயணத்திற்கு முன்னர் எல்லை சிக்கல் குறித்து கலந்துரையாடலை மேற்கொண்ட ராஜ்நாத்சிங்!

சீனாவுடனான எல்லை சிக்கலில் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சீனா பதற்றத்தை அதிகரித்தால் அதே வழியில் பதிலளிக்கவும் தயாராக இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Advertisement
இந்தியா

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை மாஸ்கோவுக்கு பயணிக்கிறார்.

Highlights

  • பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என கூட்டத்தில் முடிவு
  • பதற்றத்தை அதிகரித்தால் பதிலளிக்கவும் தயாராக இருக்க வேண்டும்
  • மாஸ்கோவில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்க உள்ளார்
New Delhi:

லாடாக்கில் இந்தியா சீனா நாடுகளின் ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சேர்ந்த பழனி உட்பட 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று, முப்படை தளபதி பிபின் ராவத், இராணுவத் தலைவர் ஜெனரல் எம்.எம்.நாரவனே, கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் மற்றும் விமானபடைத் தலைவர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாரியா ஆகியோருடன் கலந்தாலோசனையை மேற்கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிரான சோவியத் வெற்றியின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பாதுகாப்பு மந்திரி மாஸ்கோவில் நடைபெறும் மாபெரும் இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சீனாவுடனான எல்லை சிக்கலில் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சீனா பதற்றத்தை அதிகரித்தால் அதே வழியில் பதிலளிக்கவும் தயாராக இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Advertisement

எந்தவொரு சீன சூழ்ச்சியையும் திறம்பட கையாள்வதற்காக இராணுவமும் விமானப்படையும் எல்.ஏ.சி(LAC) உடன் தங்கள் செயல்பாட்டு திறன்களை அதிகரித்து வருகின்றன. முன்னதாக வெள்ளிக்கிழமை நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், பிரதமர் மோடி சீனா எந்த இந்திய பிரதேசத்தையும் கைப்பற்றவில்லை அல்லது எல்லைகளை கடக்கவில்லை என்று கூறியிருந்தார். மேலும், "நாங்கள் எங்கள் ஆயுதப்படைகளுக்கு ஒரு சுதந்திரமான கையை வழங்கியிருந்தாலும், இராஜதந்திர ரீதியிலும் நாங்கள் சீனாவுக்கு எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளோம். இந்தியா அமைதியையும் நட்பையும் விரும்புகிறது, ஆனால் அதன் இறையாண்மையை பாதுகாப்பது மிக உயர்ந்தது" என்று அவர் கூறியிருந்தார்.

Advertisement