This Article is From Jan 25, 2019

அரசு முடங்கியதால் தள்ளிப்போன நாசாவின் விண்வெளி வீரர்கள் நினைவு நாள்!

பலரும் இந்த நாளை மிகவும் முக்கியமான நாளாக கொண்டாடுகிறார்கள். பல இழப்புகளுக்கு இந்த நாள் நினைவு நாளாக கொண்டாடப்படுகிறது.

அரசு முடங்கியதால் தள்ளிப்போன நாசாவின் விண்வெளி வீரர்கள் நினைவு நாள்!

நாசா பணியாளர்கள் பலரும் அரசு முடங்கியுள்ளதால், பணிக்கு திரும்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது.

Washington:

அமெரிக்காவுக்காக உயிர்நீத்த விண்வெளி வீரர்களுக்கு நினைவுநாள் கொண்டாடுவதை நாசா ஒத்துவைத்துள்ளது. இதற்கு காரணம் அரசு முடங்கியுள்ளதால் இதனை கொண்டாடுவதை தள்ளி வைத்துள்ளோம் என்று நாசா அறிவித்துள்ளது. 

இந்த நிகழ்வு ஜனவரி 31ம் தேதி நடைபெறுவதாக நாசா அறிவித்திருந்தது. நாசாவின் நிர்வாகியான ஜிம் கூறும்போது "ஏஜென்சி பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் உள்ளதால் அவர்கள் பங்களிப்பின்றி இதனை கொண்டாட முடியாது. அதனால் அவர்கள் பணிக்கு திரும்பும் வரை ஒத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

"நினைவுநாள் என்பது வீரர்களை நினைவு கூறுவது மற்றும் அவர்களது குடும்பங்களை கெளரவிப்பது மட்டுமல்ல, இது அமெரிக்க வீரர்களின் தியாகம், அணி செயல்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றை நினைவு கூறுவது" என்றார்.

பலரும் இந்த நாளை மிகவும் முக்கியமான நாளாக கொண்டாடுகிறார்கள். பல இழப்புகளுக்கு இந்த நாள் நினைவு நாளாக கொண்டாடப்படுகிறது.

அப்போலோ, 1 ஜனவரி 28,1967ம் ஆண்டு எரிந்து விழந்தது. 2003ல் கல்பனா சாவ்லா விண்வெளிக்கு சென்று திரும்பும் போது உயிரிழந்தார். இப்படி பலரையும் நினைவுகூறும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. 

நாசா பணியாளர்கள் பலரும் அரசு முடங்கியுள்ளதால், பணிக்கு திரும்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது.

.