This Article is From Nov 16, 2018

"குரங்கை பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கு பட்டியலிலிருந்து நீக்க வலியுறுத்தல்"

குரங்குகளை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடித்து வருவதால் மக்களிடையே குரங்குகளைப் பற்றிய பய உணர்வு அதிகரித்துள்ளது

Agra:

ஆக்ராவில் இரண்டு நாட்களுக்கு முன் 12 மாத குழந்தையை குரங்கொன்று அதன் தாயிடமிருந்து பறித்து கொன்ற நிலையில் அங்குள்ள விலங்கு நல ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கடந்த புதன்கிழமையன்று குரங்கினை பாதுக்காக்க‌ப்பட வேண்டிய விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

‘கடந்த பத்தாண்டுகளாக இக்குரங்குகளை காட்டில் விட வலிறுத்தி வருகிறோம், அதுவரை, குரங்களை சுகாதாரமாக வைத்து கொள்ளவும் நோய்க்கிருமிகள் பரவாமல் இருக்க அரசு எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை என்று  சத்தியமேவ ஜெயதே பொறுப்பாளர் முகேஷ் ஜெயின் வருத்தம் தெரிவித்தார்.

மேலும் குரங்குகளை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடித்து வருவதால் மக்களிடையே குரங்குகளைப் பற்றிய பய உணர்வு அதிகரித்துள்ளது. இதனால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் (1992) கீழிருந்து குரங்குகளை நீக்க வேண்டும் என கோரிக்கையை விலங்குநல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 25,000 குரங்குகள் ஆக்ராவில் உள்ளதாக அங்குள்ள மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ‘குரங்கு கடிகளால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டதால் குழந்தைகளும், பெண்களும் வெளியில் வரப்பயப்படுவதாகவும்' சமூக நல ஆர்வலர் சரவன் குமார் சிங் தகவல் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நஷ்டயீடு வழ‌ங்குமாறு அரசாங்கத்திடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

.