Read in English
This Article is From Nov 12, 2019

முன்னாள் முதல்வரை கொன்றவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுளாக குறைப்பு!!

பஞ்சாபில் கடந்த 1995, ஆகஸ்ட் 31- ம்தேதி நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி முன்னாள் முதல்வர் பீந்த் சிங் உள்பட 17 பேர் உயிரிழந்தார்கள்.

Advertisement
இந்தியா Edited by

கொலை வழக்கில் பல்வாந்த் சிங் ரஜோனாவுக்கு கடந்த 2007-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Chandigarh (Punjab) :

பஞ்சாபில் முன்னாள் முதல்வர் பீந்த் சிங் கொலை வழக்கில், குற்றவாளி பல்வந்த் சிங் ரஜோனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் கடந்த 1995, ஆகஸ்ட்  31- ம்தேதி நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி முன்னாள் முதல்வர் பீந்த் சிங் உள்பட 17 பேர் உயிரிழந்தார்கள்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பீல்வந்த் சிங் ரஜேனாவுக்கு கடந்த 2007-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ரஜோனா தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்த நிலையில், சீக்கிய மதகுரு குருநானக்கின் 550-வது பிறந்த நாளை முன்னிட்டு ரஜோனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனயாக குறைத்து மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Advertisement

இந்த ஒப்புதல் சண்டிகர் நிர்வாகத்தின் கீழ் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

Advertisement