தருமபுரி மாவட்டத்தில் அரூர் அருகே உள்ள சிட்லிங் மலைக்கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, மலம்கழிக்க காட்டுப்பகுதிக்குச் சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, இது போன்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனை தான் தீர்வு. குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே தஷ்வந் வழக்கு குறித்து உங்களுக்கு தெரியும். அதில் அரசு குறுகிய கால கட்டத்தில் தூக்கு தண்டனை பெற்று கொடுத்தது. இது போல் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை தான் தீர்வு.
அதனால், தஷ்வந்த் வழக்கு போலவே இந்த வழக்கிலும் இருவருக்கும் உச்சபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும். அரசு அதற்கான தீவிர முனைப்பு காட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.