हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 09, 2019

நாளை காங்கிரஸுக்கு புதிய தலைவர் தேர்வு எனத் தகவல்… முன்னிலை வகிப்பது இவர்தான்!

கடந்த மே மாதம் ராகுல் காந்தி, காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்

Advertisement
இந்தியா Edited by

நாளை டெல்லியில் காங்கிரஸின் செயற்குழு கூடுகிறது. அந்தக் கூட்டத்தில் இது குறித்தான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

New Delhi:

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நாளை தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இன்று டெல்லியில் இருக்கும் சோனியா காந்தி இல்லத்தில் அக்கட்சியின் முக்கிய புள்ளிகள் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த தகவல் வந்துள்ளது. கடந்த மே மாதம் ராகுல் காந்தி, காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் கட்சியின் புதிய தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு செய்யப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. 

நாளை டெல்லியில் காங்கிரஸின் செயற்குழு கூடுகிறது. அந்தக் கூட்டத்தில் இது குறித்தான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காந்தி குடும்பத்தில் இல்லாத ஒருவர் அக்கட்சியின் தலைவராக 20 ஆண்டுகளுக்கு பின்னர் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 

134 ஆண்டுகள் வரலாறு கொண்ட காங்கிரஸுக்கு, நேரு - காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் அதிக காலம் தலைவராக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

ராகுல் காந்தி, கட்சியின் தலைவராக இருந்து காங்கிரஸை சிறப்பாக வழிநடத்தியமைக்கு நாளை கூடும் செயற்குழு நன்றி தெரிவிக்கும் என்று தகவல் தெரிந்த வட்டாரம் நம்மிடம் கூறுகிறது. ராகுல், தலைவர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது என்று தொடர்ந்து கட்சிக்குள்ளேயே பலர் குரல் கொடுத்து வந்தனர். ஆனால், அவர் தனது முடிவில் ஸ்திரமாக இருக்கவே, கட்சியினரும் பதவி விலகாமல் இருக்குமாறு வலியுறுத்துவதை நிறுத்திக் கொண்டனர். 

இன்று சோனியா காந்தி இல்லத்தில் நடந்த முக்கிய சந்திப்பில் காங்கிரஸின் மூத்த நிர்வாகிகளான ஏ.கே.அந்தோணி, அகமத் படேல், கே.வி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், ‘இனியும் கட்சிக்குத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதில் தாமதம் நிலவக் கூடாது' என்று வலியுறத்தப்பட்டதாம். 

Advertisement


 

Advertisement