This Article is From Jun 04, 2019

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை: 2 வாரத்தில் முக்கிய முடிவு!

முன்னதாக ராஜிவ் வழக்கின் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யக் கோரி ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை சிபாரிசு செய்தது குறிப்பிடத்தக்கது. 

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை: 2 வாரத்தில் முக்கிய முடிவு!

இந்த விவகாரம் குறித்து ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது

Chennai:

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், 2 வாரத்தில் முடிவெடுப்பார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது தமிழக அரசு. முன்னதாக ராஜிவ் வழக்கின் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யக் கோரி ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை சிபாரிசு செய்தது குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், நளினி, ஜெயக்குமார் ஆகியோர் குற்றம் நிரூபிக்கப்பட்டு கட்ந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். 

இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. விசாரணைக்குப் பின்னர் எழுவரையும் விடுவிப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை, எழுவரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு சிராரிசு செய்தது.

இந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதில் அவர் கையெழுத்திடாமல் தாதமதம் செய்வதாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே குண்டுவெடிப்பின்போது ராஜிவ் காந்தியுடன் உயிரிழந்தவர்களுடைய உறவினர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். 

அவர்கள் 7 பேரை விடுவிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் 7 பேரின் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் இந்த விவகாரம் குறித்து ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இப்படிப்பட்ட சூழலில்தான் நளினி மற்றும் ராபர்ட் பயாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்களின் விடுதலை குறித்து வழக்கு தொடர்ந்துள்ளனர். இரு வெவ்வேறு நீதிமன்ற அமர்வுகளின் கீழ் வழக்குகள் விசாரணைக்கு வந்தன. வழக்குகளில் அரசு தரப்பு, 2 வாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை குறித்து தெரியவரும் என்று பதில் அளித்தது. அதைத் தொடர்ந்து இரு வழக்குகளும் 4 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


 

.