ஒரு வருடத்திற்கு முன்பாகவே 40 ஏக்கர் நிலத்தை வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
Hyderabad: பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில், பாப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில், 40 ஏக்கர் பரப்பளவில் நடிகர் நாகார்ஜூனாவுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இது சாகுபடி செய்தவற்கு ஏற்ற நிலமா என்பதை ஆய்வு செய்ய நடிகர் நாகார்ஜூனா சில நபர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் புதன்கிழமையன்று ஆய்வில் ஈடுபடும் போது, ஒரு பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளதை அறிந்துள்ளனர்.
இதையடுத்து, உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த பழைய ரூம் ஒன்றில் அழுகிய நிலையில் மனித உடல் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். அதை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அண்மையில், நாகார்ஜுனாவும் அவரது குடும்பத்தினரும் சமீபத்தில் பண்ணை வீட்டிற்குச் சென்று சில மரக்கன்றுகளை நட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சில ஆர்கானிக் உணவு பயிர்களை பயிரிடுவதற்காக, நடிகர் சில நிபுணர்களிடன் ஆலசோனை கோரிய நாகார்ஜூனா, இது தொடர்பாக நிலத்தை ஆய்வு செய்ய பண்ணை வீட்டுக்கு சில ஆட்களை அனுப்பியுள்ளார்.
மேலும், ஒரு வருடத்திற்கு முன்பாகவே 40 ஏக்கர் நிலத்தை வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)