நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 7,93,802 ஆக அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,26,581ஆக உயர்ந்துள்ளது. சென்னையில், 52,287 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 71 சதவீத மீட்பு விகிம் ஆகும். 1,169 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 20,271 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 2,700 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்று பரிசோதனை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. கடந்த 7-ம் தேதி சென்னையில் 9,415 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 8-ம் தேதி 10,139 ஆக உயர்ந்த கொரோனா பரிசோதனை எண்ணிக்கை, 9-ம் தேதி, 8,128 ஆக குறைந்ததுள்ளது. 10-ம் தேதியான நேற்று, 8,655 பேருக்கு மட்டுமே சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதாவது நேற்றைய தினத்தில் சென்னை முழுவதும் முந்தைய தினத்தைவிட கூடுதலாக 527 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
தேசிய அளவில் தொற்று பதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில் தமிழகத்தில் சென்னையில் பாதிப்பு குறைந்து டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பரிசோதனை எண்ணிக்கை குறைப்பு காரணமா என்கிற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.