This Article is From Nov 02, 2019

ஜெயலலிதா வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க ஜெ.தீபா எதிர்ப்பு! - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெயா’ என்ற பெயரில் இந்தியிலும் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார்.

ஜெயலலிதா வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க ஜெ.தீபா எதிர்ப்பு! - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

அடுத்து வருடம் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது போன்று வழக்கு தொடர்ப்பட்டுள்ளது.

Chennai:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி' என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெயா' என்ற பெயரில் இந்தியிலும் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதேபோல், திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், தனது அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த அனைத்து விவரங்களும் தனக்கு தெரியும் என்றும் அதனால், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் தனக்கு உள்ளது என்றும் தீபா கூறியுள்ளார்.

மேலும், இந்த கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்று அவர் கூறியுள்ளார். அதனால், தனது அனுமதி இல்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாகவோ, தொடராகவோ எடுக்க அனுமதிக்க கூடாது என்று அவர் கூறியுள்ளார். 

இந்த திரைப்படத்த்திற்கான அனைத்து பணிகளும் தொடங்கி படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. அடுத்து வருடம் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது போன்று வழக்கு தொடர்ப்பட்டுள்ளது.

இந்த வழக்கை வரும் நவ.4ஆம் தேதி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று தெரிகிறது. 

.