This Article is From Jan 08, 2020

நாங்கள் பயப்படவில்லை என்பதே பெருமை : தீபிகா படுகோன்

#DeepikaPadukone மற்றும் #ISupportDeepika என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.

தீபிகா படுகோன் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

New Delhi:

பாலிவுட்டின் மிக பிரபலமான நடிகர்கள் பலரும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் ஜே.என்.யூ மீதான தாக்குதல் குறித்த போராட்டத்திற்கு  வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நடிகை தீபிகா படுகோன் ஜே.என்.யூவில் நடந்த தாக்குதலைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு  தனது ஆதரவை வெளிப்படுத்தினர். 
இது குறித்து NDTV நேர்காணலில் பேசியதாவது; 
“நாம் நம்மை வெளிப்படுத்த பயப்படுவதில்லை என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நம் நாட்டையும் எதிர்காலத்தையும் பற்றி நாம் சிந்திக்கிறோம் நல்லது. நம் கண்ணோட்டம் எதுவாக இருந்தாலும் நாடு முழுவதும் எதிர்ப்புகள் இருந்த போதும் மக்கள் தெருவுக்கு வந்து போராடுவதைக் காணும்போது  மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.

bb2miel

“சமுதாயத்திலும் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தைக் காண விரும்பினால் மக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பது மிகவும் அவசியம்” என்று தெரிவித்தார். 

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
இரண்டு நாட்களுக்கு முன்பு முகமூடி அணிந்தவர்களின் வன்முறைக்கு இலக்காக மாறியது. நடந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்தனர். குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று உருட்டுக் கட்டை, இரும்புக் கம்பி கொண்டு தாக்கினர்.

தீபிகா படுகோன் பல்கலைக்கழகத்தில் ஏதும் பேசவில்லையென்றாலும் தாக்கப்பட்ட மாணவர்களின் குழுவுடன் இணைந்து நின்றார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் உட்பட்டவர்களை சந்தித்தார். இந்நிகழ்ச்சியில்  முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் கலந்து கொண்டார்.

தீபிகா படுகோன் நடித்து அடுத்து வெளிவரவுள்ள ‘சபக்' என்ற படத்தை புறக்கணிக்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்து #ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அதற்கு எதிராக #DeepikaPadukone மற்றும் #ISupportDeepika என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.

இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும்  ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் குடியுரிமை திருத்த சட்டத்தையும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மீதான் தாக்குதலையும் வெளிப்படையாக விமர்சித்தனர். தீபிகா படுகோன் குறித்த ஆதரவையும் முன்வைத்தனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் குறித்த தாக்குதலுக்கு சோனம் கபூர், டாப்ஸி பன்னு மற்றும் பல நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். 
 

.