மான் முட்டியபோது கையில் இருந்த பெப்சியை கீழே கொட்டவில்லை
கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் கேன் வோர்த்தி என்பவர் தனது மனைவியுடன் உணவு உண்பதற்காக அருகில் உள்ள மெக்–டொனால்ஸ்க்குச் சென்றுள்ளார். உணவு உண்ட பின் இருவரும் வெளியில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத நேரத்தில் கேன் வோர்த்தியை எங்கிருந்தோ வந்த மான், பலமாக முட்டி கீழே தள்ளியது.
மான் தாக்கிய அந்த காட்சியை கேன் வோர்த்தி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை சுமார் 2.7 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 'நல்வாய்ப்பாக நீங்கள் காயம் ஏதும் இன்றி தப்பித்து விட்டீர்கள்' என்று பலர் அந்த வீடியோவில் கமெண்ட் செய்துள்ளனர்.
இது குறித்து பேசிய கேம், 'நல்ல வேலை இந்த சம்பவத்தின்போது எனது மனைவியோ அல்லது வேறு குழந்தைகளோ அந்த இடத்தில் இல்லை, ஏன் என்றால் கண்டிப்பாக அவர்களால் அந்த தாக்குதலை தாங்கியிருக்க முடியாது' என்று கூறினார். அவர் மேலும், 'அந்த மான் என்னை முட்டி நான் கீழே விழுந்தபோதும் கையில் இருந்த டையட் பெப்சியை நான் கீழே சிந்தவில்லை' என்று அவர் புன்னகையுடன் கூறியுள்ளார்.
'வாழ்கையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இதுபோன்ற சில விஷயங்கள் நடக்கும், ஆனால் கடவுள் எப்பொதும் நல்லவர், அந்த மான் என்னை பலமாக முட்டியபோதும் எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை' என்று அந்த வீடியோவை முகநூளில் பதிவிடும்போது கேன் வோர்த்தி குறிபிட்டுள்ளார்.
Click for more
trending news