This Article is From Oct 19, 2018

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் மத்திய அமைச்சர் நிர்மலா சிதாராமன் சந்திப்பு

சிங்கப்பூரில் நடந்த ஏசியான் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டின்போது இந்த சந்திப்பு நடைபெற்றது. 5-வது முறையாக இந்த மாநாடு நடந்துள்ளது

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் மத்திய அமைச்சர் நிர்மலா சிதாராமன் சந்திப்பு

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் உடன் நிர்மலா சீதாராமன்

Singapore:

சிங்கப்பூரில் நடைபெற்ற ஏசியான் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டின்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஏசியான் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்ற 12-வது மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது.

இந்த மாநாட்டின்போது சர்வதேச பிரச்னைகள், அவற்றை எதிர்கொள்ளும் விதம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டின் இடையேதான் மேட்டிசை நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.

இதேபோன்று மலேசியா பாதுகாப்பு அமைச்சர் முகமது பின் சாபு, ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டோபர் பைன், பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் டெல்பின் லாரன்சனா, வியட்நாமின் கோ சுவான் லிச் ஆகியோருடனும் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் மூலம் இந்தியா மற்றும் ஏசியான் நாடுகளுக்கிடையே பாதுகாப்பு தொடர்பான உறவுகள் வலுவடைந்துள்ளன. இதனை தவிர்த்து இந்தியா – சிங்கப்பூர் இடையே கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் ஒன்று விரைவில் கையழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வியாழன் அன்று சிங்கப்பூர் சென்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிறன்று இந்தியா திரும்புகிறார்.

.