இந்த விமானத்தில் பறக்கும் முதல் பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் உள்ளார்
Bengaluru: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ( Rajnath Singh) இன்று இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட லைட் போர் விமானமான தேஜாஸில் (Tejas) பறக்கத் தயாரானார். இந்த விமானத்தில் பறக்கும் முதல் பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் உள்ளார்.
“இந்த நாளுக்காக அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளது” என்று ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார். இரண்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
68 வயதான ராஜ்நாத் சிங், இந்திய விமானப்படை விமானிகளின் மாநாட்டிற்கு பிறகு தேஜஸின் இரட்டை இருக்கைகள் கொண்ட விமானத்தில் பறக்கவுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, கோவாவில் இந்தியாவில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானத்தின் தரையிறக்கம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இந்திய விமானப்படையில் தேஜஸ் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது. கடற்படைக்கு ஏற்ற வகையில் இதில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கண்காட்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொள்வார்.
தொடக்கத்தில் இந்திய விமானப்படை 40 தேஜஸ் விமானங்களை தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உடன் ஒப்பந்தம் செய்ந்திருந்தது.
ஜனவரி மாதத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் சுகோய் -30 போர் விமானத்தில் பயணம் செய்தார். போர் விமானத்தில் பயணித்த இரண்டாவது இந்திய பெண் அரசியல் தலைவராவார்.