Read in English
This Article is From Apr 13, 2019

''இந்திய ஏவுகணைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது'' : நிர்மலா சீதாராமன்

பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பதற்கு இந்தியா தகுதி வாய்ந்த நாடாக உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by (with inputs from Agencies)

பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

New Delhi:

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஏவுகணைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது- 

பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் இந்தியாவிடம் இருக்கிறது. போர்க்கப்பல்களைக் கூட தயாரிக்கும் சக்தி நம்நாட்டில் உள்ளது. சில வெளிநாடுகளில் இந்த தயாரிப்பு யுக்திகளை தங்களுக்கு கற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். 

பாதுகாப்பு உபகரணங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொலைநோக்கு திட்டம் நம்மிடம் இருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு பொருட்கள் உலகத் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும். இதற்காக தொழில் அதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 
 

Advertisement
Advertisement