This Article is From Aug 25, 2018

21,000 கோடி ரூபாய்க்கு 211 ஹெலிகாப்டர்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

பாதுகாப்பு அமைச்சகத்தின் உச்சபட்ச அமைப்பான DAC கூட்டத்தில் இன்று இம்முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன

21,000 கோடி ரூபாய்க்கு 211 ஹெலிகாப்டர்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

மொத்தம் 46,000 கோடி ரூபாய்க்கான கொள்முதல் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

New Delhi:

இந்தியக் கடற்படையின் பயன்பாட்டுக்காக 111 பன்னோக்குப் பயன்பாட்டு உலங்கு வானூர்திகளை 21,000 கோடி ரூபாய் செலவில் வாங்கும் முக்கிய முடிவுக்கு பாதுகாப்பு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

“மொத்தம் 46,000 கோடி ரூபாய்க்கான கொள்முதல் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஹெலிகாப்டர்கள் வாங்கும் முடிவும் அடங்கும்” என்று அத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு அமைச்சகத்தின் உச்சபட்ச அமைப்பான DAC கூட்டத்தில் இன்று இம்முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் 24,879 கோடி ரூபாய் செலவில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 150 அதிநவீன பீரங்கிகள் (155மிமீ) உள்ளிட்ட இதர இயந்திரங்கள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

.