மொத்தமாக வந்த விண்ணப்பங்களில் 677 விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டன. மற்ற விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
Chennai: சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தமிழக அரசின், தலைமைச் செயலகத்தில், 14 துப்பரவுப் பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அந்தப் பணிக்குச் சேர எம்.டெக், பி.டெக், எம்.பி.ஏ போன்ற கல்வி பயின்ற பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
மொத்தம் இருக்கும் 14 காலி இடங்களுக்கு, மொத்தமாக 4,607 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி, தலைமைச் செயலக செயலர் இந்த காலி இடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். துப்பரவுப் பணிக்கான அடிப்படைத் தகுதிகளாக, 18 வயது நிரம்பி இருக்க வேண்டும், உடலில் எவ்வித குறைபாடும் இருக்கக் கூடாது என்று மட்டும்தான் சொல்லப்பட்டிருந்தது. அதற்குத்தான் பொறியாளர்கள் உள்ளிட்ட பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளனர்.
மொத்தமாக வந்த விண்ணப்பங்களில் 677 விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டன. மற்ற விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. துப்பரவுப் பணிக்கு பல பட்டதாரிகள் விண்ணப்பித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.