ஒப்புதலை தொடர்ந்து விரைவில் பெயர் மாறுகிறது உத்தரகாண்டின் டேராடூன் விமான நிலையம்
Dehradun: டேராடூன் விமான நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயரை சூட்டுவதற்கு உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது.
டேராடூன் விமான நிலையத்திற்கு வாஜ்பாயின் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் உத்தகரகாண்ட் அமைச்சரவை கூட்டத்தின்போது இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து டேராடூன் விமான நிலையத்தின் பெயர் அடல் பிஹாரி வாஜ்பாய் விமான நிலையம் என்று விரைவில் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதேபோன்று 27 கோரிக்கைகளை உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்து கிளியர் செய்திருக்கிறது.