This Article is From Jun 08, 2020

பென்ஸ் காரை ரிவர்ஸ் எடுக்கும்போது விபரீதம்: 10 மாத குழந்தை உடல் நசுங்கி உயிரிழப்பு!

குழந்தை ராதிகாவின் தந்தை செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். விபத்தை ஏற்படுத்திய கார் தொழிலதிபர் ஜாஸ்பிர் சிங் என்பவரது கார் ஆகும். 

பென்ஸ் காரை ரிவர்ஸ் எடுக்கும்போது விபரீதம்: 10 மாத குழந்தை உடல் நசுங்கி உயிரிழப்பு!

பென்ஸ் காரை ரிவர்ஸ் எடுக்கும்போது விபரீதம்: 10 மாத குழந்தை உடல் நசுங்கி உயிரிழப்பு!

New Delhi:

டெல்லியில் 10 மாத குழந்தை காருக்கு பின்னாள் விளையாடி கொண்டிருந்தது தெரியாமல், ஓட்டுநர் பென்ஸ் காரை ரிவர்ஸ் எடுத்ததால், குழந்தை உடல் நசுங்கி உயரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக டெல்லி துணை காவல் ஆணையர் தீபக் புரோகித் கூறும்போது, 10 மாத குழந்தை ராதிகா தனது வீட்டிற்கு வெளியே பார்க்கிங் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்துள்ளது. அப்போது, 31வயதான அகிலேஷ் என்பவர் பென்ஸ் காரை குழந்தை இருப்பது தெரியாமல் ரிவர்ஸ் எடுத்துள்ளார். 

இதையடுத்து, படுகாயமடைந்த குழந்தையை உடனடியாக அருகில் இருந்த தீன்தயாள் உபாதே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அப்போது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

குழந்தை ராதிகாவின் தந்தை செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். விபத்தை ஏற்படுத்திய கார் தொழிலதிபர் ஜாஸ்பிர் சிங் என்பவரது கார் ஆகும். 

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து, பிரேத பரிசோதனைகள் முடிந்த பின்னர் குழந்தையின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

.