Read in English
This Article is From May 12, 2019

6வது கட்ட தேர்தல்: டெல்லி, 6 மாநிலங்களில் வாக்குப்பதிவு- 10 ஃபேக்ட்ஸ்!

இன்றைய தேர்தலில் சுமார் 10.17 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதியானவர்களாக இருப்பர்.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

2019 ஆம் ஆண்டின் ஆறாவது கட்ட தேர்தல் இன்று நடந்து வருகிறது. மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகள் இன்றைய தேர்தலில் போட்டியிடுகின்றனர். இன்று மொத்தமாக 59 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. நாட்டின் தலைநகரமான டெல்லியிலும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று தேர்தல் நடக்கும் 59 தொகுதிகளில் பாஜக, 2014 ஆம் ஆண்டு தேர்தலில் 45-ஐ கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகளிலும், ஹரியானாவில் 10 தொகுதிகளிலும், ஜார்கண்டில் 4 தொகுதிகளிலும், பிகார், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா 4 தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. 

10 ஃபேக்ட்ஸ்:

1.இன்றைய தேர்தலில் சுமார் 10.17 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதியானவர்களாக இருப்பர். இன்றைய வாக்குப்பதிவையொட்டி, 1.13 லட்சம் வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கும். 

Advertisement

2.உத்தர பிரதேசத்தின் ஃபுல்பூர் மற்றும் கோராக்பூரில் நடக்கும் தேர்தல்தான் இன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சென்ற ஆண்டு இந்த இடங்களுக்கு நடந்த இடைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி வைத்து வெற்றி பெற்றன. இதைத் தொடர்ந்துதான் மக்களவை தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி வைக்க முடிவு செய்தன. 

3.அகிலேஷ் யாதவ், அசாம்கர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பாஜக-வின் தினேஷ் லால் யாதவ் ‘நிரவ்வா' களமிறக்கப்பட்டுள்ளார். 2014 தேர்தலில் அகிலேஷின் தந்தையான முலாயம் சிங் யாதவ், இந்த இடத்தில் சுமார் 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

Advertisement

4.டெல்லியில் இருக்கும் 7 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. அங்கு ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட மூன்று கட்சிகளும் மல்லுக்கட்டுகின்றன. மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

5.டெல்லியில் பாதுகாப்புக்காக சுமார் 60,000 பாதுகாப்புப் படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். டெல்லி பகுதியில் இருக்கும் அனைத்து மதுபானக் கடைகளும் தேர்தலையொட்டி மூடப்பட்டுள்ளன.

Advertisement

6.மேற்கு வங்கத்தின் தாம்லுக், காந்தி, மேதினிபூர், பாங்க்புரா, பிஷ்ணுபூர், புருலியா, ஜர்கரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு ஆளும் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் போட்டியிடுகின்றனர். தேர்தலையொட்டி 15,428 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். 

7.ஜார்கண்டில் இருக்கும் தான்பாத், கிரிதி, ஜம்ஷெத்பூர், சிங்பம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு பல முன்னணி அரசியல்வாதிகள் போட்டியிடுகின்றனர். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் இந்த அனைத்துத் தொகுதிகளையும் பாஜக வென்றது. 

Advertisement

8.போபாலில் காங்கிரஸ் மூத்த நிர்வாகி திக்விஜய சிங் மற்றும் பாஜக-வின் பிரக்யா தாக்கூர் இடையில் போட்டி நடக்கிறது. மத்திய பிரதேச முதல்வரான கமல்நாத்திற்கு சவால்விடும் வகையில், பாஜக கோட்டையான போபாலில் இருந்து போட்டியிட சம்மதித்துள்ளார் திக்விஜய சிங். போபால், 1989 ஆம் ஆண்டு முதல் பாஜக வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

9.பிகாரில் இன்று நடக்கும் 8 தொகுதிகளுக்கான தேர்தலில் 127 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் இந்த அனைத்து இடங்களையும் பாஜக-தான் கைப்பற்றியது. 

Advertisement

10.59 நாடாளுமன்றத் தொகுதித் தேர்தலை தவிர, திரிப்புராவில் இருக்கும் 26 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடக்கிறது. திரிப்புராவில் ஏப்ரல் 11 ஆம் தேதி தேர்தல் நடந்தது. அப்போது பல குளறுபடிகள் நடந்ததைத் தொடர்ந்து மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 

Advertisement