This Article is From Nov 01, 2019

Delhi Pollution: காற்று மாசினால் தள்ளாடும் தலைநகரம்… 5 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

Delhi Air Quality: உலகின் மிக அதிக மாசான நகரங்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது டெல்லி.

Delhi Pollution: காற்று மாசினால் தள்ளாடும் தலைநகரம்… 5 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

Delhi Pollution: டெல்லியில் இப்படி வரலாறு காணாத காற்று மாசு நிலவுவதால், காலையில் நடைபயிற்சிக்குச் செல்பவர்களும், பணிக்குச் செல்பவர்களும் முகமூடி அணிந்தபடியே தங்களது வேலைகளை செய்கின்றனர். 

New Delhi:

Delhi Pollution: தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்து டெல்லி (Delhi) மற்றும் தலைநகர்ப் பகுதிகளில் காற்று மாசு மோசமடைந்துள்ள (Air Pollution) காரணத்தினால், பொது சுகாதார அவசரநிலை (public health emergency) பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் நவம்பர் 5 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். 

மேலும், பள்ளிகளில் வெளிப்புறம் செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் வரும் 5 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கச் சொல்லியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமான EPCA, 5 ஆம் தேதி வரை கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதித்துள்ளது. டெல்லியில் ‘மிக மோசமான' அல்லது ‘அவசரகால' அளவுக்குக் காற்று மாசு மாறியதால்தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இன்று, டெல்லியின் பள்ளிக் குழந்தைகளுக்கு மாசுவிலிருந்து காத்துக் கொள்வதற்கான முகமூடிகளை வழங்கிய கெஜ்ரிவால், டெல்லி ஒரு ‘காஸ் அறை' போல மாறியுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள், சுள்ளிகளை எரிப்பதினால் டெல்லி பெரும் பாதிக்குப்பு உள்ளாவதாகக் கூறினார். 

டெல்லியில் இப்படி வரலாறு காணாத காற்று மாசு நிலவுவதால், காலையில் நடைபயிற்சிக்குச் செல்பவர்களும், பணிக்குச் செல்பவர்களும் முகமூடி அணிந்தபடியே தங்களது வேலைகளை செய்கின்றனர். 

உலகின் மிக அதிக மாசான நகரங்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது டெல்லி. தீபாவளியின் போது வெடிக்கும் பட்டாசுகளின் புகை, அண்டை மாநில விவசாயிகள் சுள்ளிகளை எரிப்பது, பனிக் காலம் காரணமாக அடர்த்தியான மேகக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றால் டெல்லியின் வானம், குளிர் காலத்தின் போது மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கின்றன. 

.