This Article is From Oct 16, 2018

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது

அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்கு காற்று மாசுபாடு சற்று அதிகமாகத்தான் இருக்கும் என்று தேசிய காற்றுத் தூய்மை அளவு மையம் தெரிவித்துள்ளது

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது

காற்று மாசு காரணமாக மக்கள் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல தொடங்கியுள்ளனர்.

New Delhi:

டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமையான இன்றும் காற்றின் தூய்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தேசிய காற்றுத்தூய்மை அளவு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் அடுத்த 24 முதல் 48 மணி நேரம் வரையில் காற்றின் மாசுபாடு சற்று அதிகமாகத்தான் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லோதி சாலை பகுதியில் காற்றின் அளவு இன்று 255-ஆக பதிவாகி இருந்தது. ஆனந்த விகார் பகுதியில் சராசரியாக 592 புள்ளிகளும், துவாரகாவில் 221 புள்ளிகளும், ஜகாங்கிர் புரியில் 251 புள்ளிகளும் பதிவாகி இருந்தன.

காற்று மாசுபடுவதை air quality index (AQI) என்று குறிப்பிட்டு வருகிறோம். இதன் அளவு 0-50- ஆக இருந்தால் காற்று தூய்மையாக இருக்கிறது என்று பொருள், 51-100 என்றால் திருப்தி அளிக்கிறது என்றும், 101-200 வரை இருந்தால் மிதமாக மாசுபட்டுள்ளது என்றும், 201-300 இருந்தால் காற்று மாசுபட்டிருக்கிறது என்றும், 301-க்கு மேல் இருந்தால் அதிகமாக மாசுபட்டுள்ளது என்றும் பொருள்.

பஞ்சாப் மற்றும் அரியானாவில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதன் காரணமாக எழும்புகை, தலைநகர் டெல்லியை சமீபத்தில் சூழ்ந்தது. இத்துடன் இயல்பாகவே டெல்லியில் இருக்கும் வாகனப் புகை காரணமாக காற்று கடுமையாக பாதிக்கப்பட்டது.

.