This Article is From Feb 10, 2020

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவு 2020: தொகுதி வாரியாக ரிசல்ட்டை அறிந்து கொள்வது எப்படி?!!

Assembly Election Results 2020: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக 2-ம் இடத்தை பிடிக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவு 2020: தொகுதி வாரியாக ரிசல்ட்டை அறிந்து கொள்வது எப்படி?!!

அக்சர்தாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாவலர்கள் நிற்கும் காட்சி.

New Delhi:

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி இங்கு ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிகிறது. 

டெல்லியில் சட்டமன்ற தேர்தல் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரையில் நீடித்தது. 24 மணி நேரத்தை கடந்த பின்னர் தேர்தல் ஆணையம் சுமார் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தது. இங்கு 1.47 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் 62.59-ஆக அமைந்துள்ளது.

கடந்த 2015 சட்டமன்ற தேர்தலில் 67.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. தேர்தலுக்காக மொத்தம் 2,700 மையங்கள் மற்றும் 13 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 

வாக்கு எண்ணிக்கைக்காக 21 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, ஆம் ஆத்மி மீண்டும் டெல்லியில் ஆட்சியமைக்கும் என தெரிகிறது. பாஜகவுக்கு 2-வது இடம் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. 

இதனை மறுத்துள்ள டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, 48 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று விடும், அதன்பின்னர் தங்களது தோல்விக்காக எதிர்க்கட்சிகள் வாக்கு எந்திரத்தை விமர்சிக்க கூடாது என்று கூறியுள்ளார். 

வாக்குகள் நாளை காலை எண்ணப்படுகின்றன. 

சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும். அதற்கடுத்த சில நிமிடங்களில் யார் முன்னிலை, பின்னிலை என்ற விவரங்கள் வெளிவரத் தொடங்கும். 
 

NDTV English channelNDTV Khabar டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை NDTV ஆங்கில செய்தி தொலைக்காட்சி, NDTV இந்தி செய்தி தொலைக்காட்சி சேனல்களில் நேரலையாக பார்க்கலாம். 

டெல்லியில் கடந்த 1998 முதல் 2013 வரையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. 2015-ல் ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன. 

தேசியவாதம், குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களை எதிர்த்து பாஜக இந்த தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டது. இதற்கு எந்த அளவுக்கு டெல்லி மக்கள் வரவேற்பு அளித்தனர் என்பது நாளை தெரிந்து விடும். 

.