This Article is From Feb 04, 2020

‘வீடு தேடிவரும் ரேஷன் பொருட்கள், 24 மணிநேர மார்கெட்’–ஆம்ஆத்மியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!!

ஒவ்வொரு குடும்பத்தினரின் மகிழ்ச்சியை உறுதி செய்யவும், டெல்லி முழு மாநில அந்தஸ்தை பெறவும் போராடுவோம் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.

‘வீடு தேடிவரும் ரேஷன் பொருட்கள், 24 மணிநேர மார்கெட்’–ஆம்ஆத்மியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!!

வரும் சனிக்கிழமை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

New Delhi:

டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி, ஆளும் ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும், 24 மணிநேரமும் செயல்படும் மார்க்கெட்டுகள், தண்ணீர் வசதி உள்ளிட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் அறிக்கையை கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா வெளியிட்டுள்ளார்.

இதில் 28 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்கள் தேடி வந்து வழங்கப்படும், புனிதப் பயணம் செல்வதற்கு முதியோருக்கு ரூ. 10 லட்சம் வரையில் உதவித் தொகை, அவர் புனிதப் பயணத்தின்போது உயிரிழந்து விட்டால் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி வரையில் இழப்பீடு உள்ளிட்ட வாக்குறுதிகள் உள்ளன.

ஒவ்வொரு குடும்பத்தினரின் மகிழ்ச்சியை உறுதி செய்யவும், டெல்லி முழு மாநில அந்தஸ்தை பெறவும் போராடுவோம் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.

சோதனை ஓட்ட முறையில் 24 மணிநேரமும் செயல்படும் மார்க்கெட்டுகளை அமைத்தல் என்ற வாக்குறுதியும் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

.