This Article is From Nov 04, 2018

டெல்லி பாலம் திறப்பு விழாவில் போலீசாரை தாக்கிய பாஜக மாநில தலைவர்

டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி போலீசாரை சரமாரியாக தாக்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது

மனோஜ் திவாரி போலீசாரை விளாசும் வீடியோ காட்சி

New Delhi:

டெல்லியின் அடையாளங்களின் ஒன்றாக மாறப்போகும் 154 மீட்டர் சிக்னேச்சர் பாலம் நேற்று மாலை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது, பாஜக மாநில தலைவர் மனோஜ் திவாரியின் நடவடிக்கையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

விழாவில் பங்கேற்பதற்கு மனோஜ் திவாரிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர் கட்சிப் பொறுப்பில் இருப்பதாலும், அவரது தொகுதிக்கு தொடர்பற்றதுமாக இருந்ததால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், விழா மேடைக்கு வர முயன்ற அவரை போலீசார் தடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் திவாரி சினிமா ஹீரோவைப் போன்று போலீசாரை விளாச தொடங்கினார். இந்த காட்சிகள் நேரடியாக டிவிக்களில் ஒளிபரப்பப்பட்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது. திவாரியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், “ பாலம் திறப்பு விழாவில் யாரும் எதிர்பார்க்காத ஒன்றை பாஜக தலைவர் செய்துவிட்டார். இது டெல்லி அரசின் நிகழ்ச்சி. போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் தலைவர் துணை நிலை ஆளுநர். அவர்தான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
 

54avtr1g

தனக்கும் விழாவுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறப்படுவதை மறுத்துள்ள மனோஜ் திவாரி, சுமார் 2 ஆயிரம் கோடி பாலம் தொடர்பான கேபிள்கள் தனது தொகுதியான வடகிழக்கு டெல்லியின் வழியே செல்வதாகவும், இதனால் தனக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க உரிமை உண்டு என்றும் கூறியுள்ளார்.

இதற்கு ஆம் ஆத்மி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், “ நொய்டா மெட்ரோ ரெயில், ஸ்கைவாக் திறப்பு விழா என எந்தவொரு விழாவுக்கும் எங்கள் முதல்வரை பாஜக அரசு அழைக்கவில்லை. இப்போது அக்கட்சி நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறது” என்றார்.

கடந்த 1997-ல் யமுனை ஆற்றில் மேல் கட்டப்பட்ட வாஸிராபாத் பாலத்தில் விபத்து ஏற்பட்டு, பள்ளி வாகனம் ஆற்றில் விழுந்தது. இதில் 22 குழந்தைகள் உயிரிழந்தனர். இதையடுத்து புதிய பாலத்தை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போதுதான் அவை முடிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.

.